• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதிலும் இந்த சாதனையை மிக வேகமாக படைத்திருக்கும் படமும் இதுதான். இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது!

by Tamil2daynews
September 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதிலும் இந்த சாதனையை மிக வேகமாக படைத்திருக்கும் படமும் இதுதான். இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது!

 

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வசூல் புள்ளி விவரங்களுடன், புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பெரிய திரையில் வியக்கத்தக்க அளவில் காண்பிக்கப்பட்டிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சாகசத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு.. வேறு வெளியீடுகளுடன் போட்டியிட்டாலும், இதன் வலுவான வசூலை அற்புதமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெரும் கூட்டத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
Jawan Box Office Day 1 Advance Booking (Overseas): Shah Rukh Khan To Create History With His Midweek Release By Registering $5M+ Collection?இந்தி திரையுலக சந்தையில் ஜவான் திரைப்படம்- வெளியான ஆறாம் நாளன்று 24 கோடி ரூபாயை வசூலித்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளுடன் சேர்த்து திரைப்படத்தின் ஆறாவது நாள் வருவாய் 26.52 கோடி ரூபாய். இந்த வசூல் மூலம் ஜவானின் இந்தி திரையுலக வசூல் மட்டும் 306.58 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் இந்தி மற்றும் பிற மொழிகளில் மொத்த வருவாயை கணக்கில் கொண்டால்.. ஆறாவது நாளில் இத்திரைப்படம் 345 கோடியே 60 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது. இந்த சாதனையின் மூலம் ஷாருக்கான் நடித்த படம் இந்தியில் மட்டும் வெளியான ஆறு நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.‌ அதிலும் மிக வேகமாக இந்த வசூலை கடந்த திரைப்படம் என்ற சாதனையும் ‘ஜவான்’ படைத்திருக்கிறது.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

Previous Post

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்!

Next Post

‘அடியே’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

Next Post

'அடியே' பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.