ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை ஆல்பம்!

by Tamil2daynews
December 12, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை ஆல்பம்!

 

பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக்கருத்து.
ஒரு பதின் பருவக் காதலால் எப்படிப் புலி ஒன்று பூனையாக மாறுகிறது என்பது தான் கதை.
ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது.இதை ஸ்ரீ வித்தகன் இயக்கி உள்ளார் மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா.இவர் நாடோடிகள், நிமிர்ந்து நில்,போராளி, தரணி, அனுக்கிரகன், கடப்புறா கலைக்குழு போன்ற படங்களில் நடித்துள்ளார். கட்டம் போட்ட சட்டை என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.
 இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் மூக்குத்தி அம்மன், வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, தேஜாவு போன்ற படங்களில் நடித்திருப்பவர்.
இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீ வித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  நாடோடிகள் ,நிமிர்ந்து நில், போராளி,வினோதய சித்தம் போன்ற படங்களில்   பணிபுரிந்தவர்.
இசை அமைத்திருப்பவர் டி.எம். உதயகுமார்.இவர் பிரண்ட்ஷிப், மைடியர் லிசா படங்களில் பணிபுரிந்தவர். அது மட்டுமல்ல குழலி, கார்முகில் போன்ற மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடல் பாடி இருக்கும் பாடகி பிரியங்கா  அவன் இவன்,உ றியடி 2 ,பலூன், நாச்சியார் போன்ற படங்களில் பாடியுள்ளார்.
இதில் பின்னணிப் பாடி இருக்கும்  பாடகரான ஜித்தின் ராஜ் பொன்னியின் செல்வன் மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.
ஆல்பத்தின் பாடலை எழுதியவர் ராஜா குருசாமி. இவர் ஏராளமான கிராமியப் பாடல்களை எழுதியுள்ளவர்.விழா, பிரண்ட்ஷிப், ராஜ வம்சம், பபூன் போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளவர்.
இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார் .ஆர். இவர் அச்சமில்லை அச்சமில்லை என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றியவர்.
இந்த ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் மணி டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான எம். மணிகண்டன் .இவர் இதில் ஒரு நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.கலை இயக்கம் கென்னடி, படத்தொகுப்பு கணேஷ் குமார், டைட்டில் டிசைன்ஸ் பிரபு மாணிக்கம், நிர்வாகத் தயாரிப்பு சித்தார்த்தன் பாரதி, மக்கள் தொடர்பு சக்தி சரவணன் என்று ஏற்கெனவே திரைப்படங்களின் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களை இணைத்துக் கொண்டு படக்குழுவை அமைத்து, தயாரித்துள்ளவர்  அஜய் கிருஷ்ணா.
பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு.இது ஒரு கிராமத்துக் காதல் கதை .கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த இசை ஆல்பத்தை நடிகரும் இயக்குநரும் கிராமியப் படங்களுக்கு பெயர் பெற்றவருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு இதற்கான கவனிப்பும் பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஏராளமான பேர் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் உயரத்திற்குச் சென்றுள்ளது. ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
Previous Post

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான்.

Next Post

வரலாறு முக்கியம் – விமர்சனம்

Next Post

வரலாறு முக்கியம் - விமர்சனம்

Popular News

  • செங்களம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘தேன்’ திரைப்பட புகழ் நடிகர்  தருண் குமார் பெருமிதம்…

    0 shares
    Share 0 Tweet 0
  • 83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

    0 shares
    Share 0 Tweet 0
  • பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செங்களம் – விமர்சனம்

March 25, 2023

N4 – விமர்சனம்

March 25, 2023

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

March 25, 2023

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

March 25, 2023

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

March 25, 2023

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

March 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!