• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

by Tamil2daynews
June 4, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

 

கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள்.  இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்திருக்கிறது.

‘இதுவரை அறியப்படாத பிரதேசத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபாஸ்’ –  என ‘தி ராஜா சாப்’ படத்தினை தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறார் பிரபாஸ். இது அவரது நடிப்பில் வெளியாகும் முதல் மற்றும் முழுமையான திகில் பொழுதுபோக்கு படமாகும். மேலும் இது அவரது வளர்ந்து வரும் பயணத்தையும் , கதை சொல்லலுக்கான அச்சமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். இப்படத்தின் முதல் மோசன் போஸ்டர் – இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளையும், பழைய பாணியிலான வசீகரத்தின் கலவையையும் சுட்டிக்காட்டியது. அத்துடன் அனைவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்த்தது.

நகைச்சுவை மற்றும் உணர்வு பூர்வமான படைப்புகளுக்காக தனித்துவமான பெயரை சம்பாதித்திருக்கும் இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி ராஜா சாப் ‘ ஆச்சரியமான பொழுதுபோக்குடன் கூடிய ஒரு திகில் படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் முதல் காட்சிகள் வரை சுவராசியத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. இதுவரை ஒவ்வொரு அம்சமும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.Imageபீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சமரசமற்ற தயாரிப்பு மதிப்பீடுகளுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.

பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய மூவரும் ‘தி ராஜா சாப்’பின் அமானுஷ்யமான அதே தருணத்தில் வண்ணமயமான உலகிற்கு வசீகரத்தையும், நேர்த்தியையும், புத்துணர்ச்சியையும் இணைத்திருக்கிறார்கள்.‌

டிசம்பர் மாதம் இந்திய சினிமாவிற்கு ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் சீசனாகும். அதனை உறுதிப்படுத்தும் வகையில்’ தி ராஜா சாப்’ தன்னை ஒரு கேம் சேஞ்சராக நிலை நிறுத்துகிறது. இதுவரை வெளியான ஒவ்வொரு தகவலும் இந்தப் படத்தைப் பற்றிய பரப்பரப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் டீசர் வெளியாக இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக ‘தி ராஜா சாப்’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இது படம் மட்டுமல்ல.. முழுமையான திகிலான அனுபவத்தை திரையரங்குகளில் வழங்கும் என உறுதி அளிக்கிறது.

சூப்பர் நேச்சுரல் திரில்லிங் –  ரொமான்டிக் காட்சிகள் – அற்புதமான திரையரங்க அனுபவம் – ஆகியவற்றுடன் டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்திற்கு.. ரசிகர்கள் துணிச்சலுடன் பிரபாஸின் ராஜ்ஜியத்திற்குள் வருகை தாருங்கள்

Previous Post

இசைஞானி இளையராஜா இசையில், நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ தந்தை – மகன் கதை!

Next Post

‘சையாரா இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சேகரித்த பாடல்கள்’ இதில் என் எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது!’ – மோஹித் சூரி

Next Post

'சையாரா இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சேகரித்த பாடல்கள்' இதில் என் எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது!’ - மோஹித் சூரி

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

August 20, 2026

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.