Veo3 AI: புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பன் பட்டர் ஜாம் திரைப்படக்குழு
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். பார்பதற்கு உண்மையான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் போல் தோன்றும் இவை அனைத்தும் முழுக்க முழுக்க 0 மற்றும் 1, பைனரி கோடால் (Binary code)ஆல் உருவாக்கப்பட்டது. அத்தனை தத்ரூபமாக ஒளிப்படங்களை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை, கடந்த மே மாதம் தான் Google நிறுவனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.

Gen Z தலைமுறையின் கதை சொல்லும் “பன் பட்டர் ஜாம்” !!
பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம் “பன் பட்டர் ஜாம்” !!
இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். ‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.
பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி உள்ளது, ”பன் பட்டர் ஜாம்”.
இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம். சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ராகவ் மிர்தாத், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தி இருப்பதாக பேசப்படுகிறது. நடிகர் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இருக்குமென்று கூறுகிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது. தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்