• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு

by Tamil2daynews
December 31, 2024
in சினிமா செய்திகள்
0
நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு

‘அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள ‘கரவாலி’ படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் ‘கரவாலி’ படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் – முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. ‘இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ‘ என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், ‘இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்’ என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது.

‘கரவாலி’ என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும்  தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது.
பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில்  யக்ஷகானா – கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது.  இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது ‘டைனமிக் பிரின்ஸ்’ ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

நடிகர்கள்
‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா,  மித்ரா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா
தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ்
இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் – ஷிதில் ஜி. பூஜாரி – சதீஷ்குமார் ராஜி – பிரசன்னா குமார்-  மனிஷ் தினகரன் .
கதை : சந்திரசேகர் பாண்டியப்பா
ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன்
இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்
படத்தொகுப்பு : பிரவீன் கல்
கலை இயக்குநர் : குணா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

https://youtu.be/-nd6AcS55O4?si=OzLMEIn4Ayw65mCX

Previous Post

ராஜாகிளி – விமர்சனம்

Next Post

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

Next Post
குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில்,  “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.