• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தசரா” திரைப்படம், 6 மதிப்புமிக்க ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது !!

by Tamil2daynews
August 7, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தசரா” திரைப்படம்,   6 மதிப்புமிக்க  ஃபிலிம்ஃபேர் விருதுகளை  வென்றது !!

 

நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான “தசரா” திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

 வெண்ணிலா கதாபாத்திரத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப்  பெற்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் தசராவுக்குப் பின்னால் உள்ள படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமையைக் கொண்டாடியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் புதுமையான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகக் கௌரவிக்கப்பட்டார். ஃபிலிம்ஃபேர் விருதை வென்ற முதல் அறிமுக இயக்குநர் என்ற சாதனையைப் படைத்த அவர், தனது முதல் படத்திலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் கடந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத்தின் அற்புதமான  காட்சிகளைப் படம்பிடித்த அவரது சிறப்பான பணிக்காக, அங்கீகரிக்கப்பட்டார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா படத்தின் செட் மற்றும் காட்சி சூழல்களை வடிவமைப்பதில் தனது உன்னிப்பான பணிக்காக விருதைப் பெற்றார்.

நடன இயக்குநர் மாஸ்டர் பிரேம் ரக்ஷித் துள்ளலான மற்றும் ஈர்க்கக்கூடிய தூம் தாம் பாடலை வடிவமைத்ததிற்காகக்  கௌரவிக்கப்பட்டார்.

விருதை பெற்றுக் கொண்ட பிறகு நடிகர்  நானி கூறியதாவது.. , “எனக்குப் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்திலிருந்தது, ஆனால் காலப்போக்கில் அந்த ஆசை குறைந்துவிட்டது. விருதுகளுக்காக எனக்கே அதிக ஆசை இல்லை. மாறாக, என்னுடைய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், என் படங்களில் அறிமுகமான புதிய திறமையாளர்கள், மற்ற கலைஞர்கள் விருதுகளைப் பெற வேண்டும் என்பதே எனது இப்போதைய ஆசை. இப்போது அது நடந்திருப்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

இன்று, ஸ்ரீகாந்த் மற்றும் ஷௌரியவ் விருதுகளை வெல்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பது பாக்கியம். இயக்குநர்கள் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஷௌரியவ் ஆகியோரின் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில், விருது அட்டைகளைப் போட்டோ பிரேம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்த  விருது அவர்கள் விரும்பும் இடத்தை அடைய அவர்களின் பயணத்தின் ஒரு சிறிய பகுதியாக இருக்கும். அவர்களின் முதல் அடிக்கு நான் மிகச் சிறிய அளவிலாவது பங்களித்திருந்தால் அதுவே எனக்குப் போதுமானது. 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தசரா மற்றும் ஹாய் நானா ஆகிய சிறந்த  திரைப்படங்கள்  மகிழ்ச்சியைத் தந்துள்ளது.”

 இரண்டு பெரிய பிளாக்பஸ்டர்களைப் பெற்ற நானிக்கு, 2023 ஆம் ஆண்டு  மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. நடிகர் நானியின் அடுத்த திரைப்படமான “சூர்யா’ஸ் சாட்டர்டே” வரும் ஆகஸ்ட் 29 அன்று திரைக்கு வரவுள்ளது.

சமசரமற்ற வகையில் பெரும் பட்ஜெட்டில் தசரா படத்தை உருவாக்கிய, SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி, நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் பிளாக்பஸ்டர் கலவையில் மீண்டும் ஒரு அற்புத படைப்பைத் தரவுள்ளார்.
Previous Post

“கூடசாரி” திரைப்படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்களை, நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார்.

Next Post

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!

Next Post

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் அறிமுகப்படமான 'மின்மினி'யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.