ஜாதியை மையமாக வைத்து வரும் படங்களில் இது ஒரு வித்தியாசமான படம்.அரசு மருத்துவமனையில் சீனியர் நர்ஸாக வேலைபார்த்து வருகிறார் நாயகன் விஜித். சுமார் 50 வயது மதிக்கத்தக்கவராக வரும், இவரை போலீஸார் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்கின்றனர்.கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் விஜித், போலீஸிடம் கதை ஒன்றை கூறுகிறார். யார் விஜித் என்று போலீஸ் அதிகாரி செழியன் விசாரணை நடத்தத் துவங்குகிறார்.விஜித் பிறந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்துகிறார் செழியன். அப்போது, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு அக்கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்காக கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.

ஷாலி விஜித்துடன் ஓட்டம் பிடிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டு விஜித்தின் கிராமத்திற்கு வருகின்றனர்.அதன்பிறகு இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.அரசு மருத்துவமனையில் சீனியர் நர்ஸாக வேலைபார்த்து வருகிறார் நாயகன் விஜித். சுமார் 50 வயது மதிக்கத்தக்கவராக வரும், இவரை போலீஸார் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்கின்றனர்.கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் விஜித், போலீஸிடம் கதை ஒன்றை கூறுகிறார். யார் விஜித் என்று போலீஸ் அதிகாரி செழியன் விசாரணை நடத்தத் துவங்குகிறார்.விஜித் பிறந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்துகிறார் செழியன். அப்போது, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு அக்கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்காக கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.
கதையில், விஜித்தின் நண்பராக வருபவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர், அக்கிராமத்துப் பெண்ணை காதலிக்கிறார். இது அக்கிராமத்தினருக்குத் தெரியவர, ஒட்டுமொத்த கிராமமே இந்த ஜாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ஊரில் பெரிய தலைகளாக இருக்கும் மைம் கோபி மற்றும் அவரது தம்பி அருள்தாஸ் இருவரும் அந்த நபரை எரித்துக் கொன்று விடுகின்றனர்.மேலும், அந்த பெண்ணையும் தாக்கி, மனநலம் பாதிக்கப்பட வைத்து ஊரில் திரிய விட்டுவிடுகிறார். ஒட்டுமொத்த கிராமமே ஆணவப் படுகொலைக்கு உடந்தையாக இருக்கிறது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாயகன் விஜித்தை அக்கிராமத்திலிருந்து கேரளா அருகேயுள்ள மஹி என்ற ஊருக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். அங்கு வேலை பார்த்துக் கொண்டே நர்ஸிங் படிக்கிறார் விஜித்.கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணான நாயகி ஷாலியும் அந்த கல்லூரியில் நர்ஸிங் படிக்கிறார். நாளடைவில் விஜித்திற்கும் ஷாலிக்கும் இருக்கும் நட்பானது காதலாக மாறிவிடுகிறது.ஷாலி விஜித்துடன் ஓட்டம் பிடிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டு விஜித்தின் கிராமத்திற்கு வருகின்றனர்.அதன்பிறகு இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் விஜித், தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவு என்றே கூறலாம். மிகவும் தெளிவான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விஜித். தனது முதல் படத்திலேயே இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே நாயகன் விஜித்தை வெகுவாகவே பாராட்டலாம். வயதான கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திச் சென்று விட்டார். விஜித்திற்கும் ஷாலிக்கும் இடையே ஹெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் ஆகியுள்ளது. ”என்ன பங்காளி” என்று ஜெயிலில் இருந்து நாயகன் விஜித், மைம் கோபிக்கு போனில் பேசும் அந்த காட்சி ஒட்டுமொத்த படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
நாயகி ஷாலி, இப்படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அழகு தேவதையாக படத்தில் தோன்றியிருக்கிறார். நடிப்பிலும் எந்த குறையும் கூறும்படியும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வயிற்றில் குழந்தையோடு தவிக்கும் காட்சியாக இருக்கட்டும், தனது காதலை மிகவும் இயல்பாக விஜித்திடம் கூறும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் ரசிக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஷாலி.
வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ் மற்றும் சாதி சங்கத் தலைவராக வரும் லோகு என இவர்கள் தங்களது கதாபாத்திரத்தை மிகவும் சரியாக செய்து முடித்திருக்கின்றனர்.
இப்படியும் ஒரு அம்மா இருப்பார்களா என்று கூறும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார் சுபத்ரா. மனநலம் பாதித்த பெண்ணாக வலீனா, நீதிபதியாக கீதா கைலாசம், ஹரிதா என படத்தில் தோன்றிய நடிகர்கள் அனைவரிடமும் சரியாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.
யாரும் தொடாத, தொடத் துணியாத ஒரு கதையை கையில் எடுத்து அதை மிகவும் நேர்த்தியாக கையாண்டு, தனது படைப்பை தரமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவபிரகாஷ். மதம், ஜாதி, ஆணவக் கொலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கி அதை திறம்பட திரைக்கதையாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவபிரகாஷ்.
இன்னமும் இப்படி இருக்கீறார்களா.? எதற்கு இது.? என்று சிலருக்குக் கேள்விகள் எழும்பலாம். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் ஏதோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை மாதங்களில் இருமுறை நாளிதழ்கள் வரும் செய்திகள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன.
2003 ஆம் ஆண்டு விருத்தாச்சலத்தில் நடைபெற்ற கண்ணகி – முருகேசன் ஆணவக்கொலையை மையப்படுத்தியே இக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இதற்காக நாயகன் விஜித் கொடுத்த தண்டனையும் வித்தியாசமானது தான். நீதிமன்றத்தின் தீர்ப்பும் அப்படியாக இருந்திருந்தால் சற்று ஆறுதல் தீர்வாவது ஒன்று கிடைத்திருக்கக் கூடும்.இளையராஜாவின் இசையில் பாடல்கள் தரமானதாக இருந்தது. பின்னணி இசையும் கதையோடு நம்மையும் பயணம் புரியவைத்தது.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் ரசனையோடு படைத்திருக்கிறது.இதை திரைப்படமாக தந்த இயக்குனருக்கு முதலில் வாழ்த்துக்கள்.இதை உரக்க சொல்ல வேண்டும் உலகிற்க்குக்கு.








