• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

by Tamil2daynews
January 17, 2025
in சினிமா செய்திகள்
0
தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”  விரைவில் திரையில்!!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE)  படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.
Imageஇப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்த தருணத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏஸ் ( ACE)  படத்தின் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து மலேசிய நாட்டின் விமான நிலையத்திற்குள் நடந்து செல்வதும்…பின் அங்கு பிரபலமான வணிக வளாகங்களில் அதிரடி சண்டை காட்சியில் ஈடுபடுவதும்…  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் உற்சாகமாக நடனமாடுவதும், சாலையில் துணிச்சலுடன் செல்வதும்… காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி மூலம் ‘ஏஸ்’ திரைப்படம் நூறு சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘போல்டு கண்ணன்’ என்பதால்.. அந்த கதாபாத்திரம் குறித்த ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் சீன நாட்டின் ரசிகர்களையும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவர்ந்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ (ACE)   படத்திற்கு தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா மற்றும் சர்வதேச ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/dul99gEmmDw

Previous Post

தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” விரைவில் திரையில்!!

Next Post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

Next Post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.