‘கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்
தேனியை சேர்ந்தவர் செல்லதுரை(ஏகன்). தன் பெரியப்பா பெரியசாமியின்(யோகி பாபு) கறிக்கடையில் வேலை செய்கிறார். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களால் தங்கை சுதாவை(சத்யா) பொத்தி பொத்தி வளர்க்கிறார் செல்லதுரை. கல்லூரி மாணவியான சுதாவுக்கு தன்னுடன் படிக்கும் மாணவர் மீது காதல் ஏற்படுகிறது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பிரிந்தற்கு காரணமாக காட்சி கதைக்காக உருவாக்கப்பட்டது போன்று இருக்கிறதே தவிர நம்பும்படியாக இல்லை.
செல்லுத்துரையின் காதலி தாமரைச்செல்வியாக வந்து போயிருக்கிறார் பிரிகிடா சாகா. ரகுநந்தனின் இசை படத்திற்கு பக்கபலம்.
படத்தில் ஒளப்பதிவு அபாரம் தேனி ஆண்டிபட்டி அழகை அள்ளிக் கொள்கிறார் ஏ ஆர் அசோக்குமார்.படத்தில் எமோஷன், காமெடி என அனைத்தும் இருந்தும் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. தயாரிப்பாளரின் மகன் ஏகன் இன்னும் சற்று நடிப்பில் கவனம் தேவை.நிச்சயமாக நீங்கள் கூத்துப்பட்டறை செல்ல வேண்டும்.