‘இ மெயில்’ – விமர்சனம்
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இ-மெயில்’. இந்த படத்தை எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் முருகா படத்தில் நடித்த அசோக் குமார் ஹீரோவாகவும், பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இசையமைத்துள்ள நிலையில், ஜூபின் பின்னணி இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
நாயகியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வர ஆன்லைன் சூதாட்டம் அதை அவர் தொடர பிறகு என்ன வருகிறது என்பதே படத்தின் திகிலுடன் கூடிய சம்பவமான கதை.
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் திகில் ஊட்டும் சம்பவங்களையும் பல பேர் பாதிக்கப்பட்டதையும் மிக அழகாக படம் பிடித்து ஒரு விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
பெரிய கோடீஸ்வரராக வாழ்ந்து தன் தாயை இழந்து பாதுகாவலர்களால் கைவிடப்பட்ட பெண்ணாக வரும் ராகினி தி வேதி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடலெடுக்கிறார்.
மனோ பாலா காமெடி சற்று கோபமடைய செய்கிறது.
படத்தில் நாயகன், நாயகி நாயகியின் தோழியாக வரும் நான்கு பெண்களும் தன் பங்குக்கு நன்றாக நடித்துள்ளார்கள்.
படத்தில் இன்னொரு முக்கிய அம்சம் என்றால் கேமரா மேன் சொல்லலாம் படம் பிடித்த விதம் அனைத்தும் அருமை ரகம்.
படத்தின் பாடல்கள் சுமார் ரகம் பின்னணி இசை ஓகே ரகம்.
இயக்குனர் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் தன் மனதில் தோன்றிய கதையை வைத்து அழகாக படம் இயக்கி இருக்கிறார் கொஞ்சம் சிறுசிறு சறுக்கல்கள் இருந்தாலும் இந்த ஈமெயில் நம் இன்பாக்ஸ் க்கு ஓகே.