கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’.
காதல் படங்கள் என்றாலே தற்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது தீபாவளிக்கு ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வந்திருக்கும் டியூட்.
ஒருவருக்கொருவர் மனதார காதலித்து விட்டு பிறகு இருவருக்குள்ளேயும் ஈகோ வருவது காதலில் உண்டான ஒரு சகஜமான விஷயம் அதை மிக கனகச்சிதமாக நாயகன் நாயகிக்கு வைத்து கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது, முதல் பாதிக்கு ஏற்ற இரண்டாம் பாதியும் நன்றாக உள்ளது. படத்தில் மிகவும் நன்றாக உள்ள காட்சிகள் என்றால், இடைவேளைக்கு முந்தைய காட்சி, கிளைமாக்ஸில் வரக்கூடிய கோர்ட் ரூம் சீன் நன்றாக உள்ளது. அதேபோல் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ்க்கு இடையிலான ஈகோ கிளாஷ் காட்சிகளும் நன்றாக உள்ளது.
விக்னேஷ் காந்த் லாயராக வரும் காட்சியும் நன்றாக உள்ளது.
படத்தில் பின்னணி இசை சிறப்பு, வசனங்கள் அருமை. படத்தில் சொல்லப்படுகிற மெசேஜும் நன்றாக உள்ளது.
மொத்தத்தில் படம் ஜாலியாகவும், எமோஷனலாகவும் ஒரு தரமான கருத்தைத் தாங்கி வந்துள்ளது. புதுமண தம்பதிகளுக்கு படம் நன்றாகவே கனெக்ட் ஆகும்”பாடல்கள் இரண்டு கேட்கும் படி உள்ளது.

அதேபோல் இன்னொரு ரசிகர், ” முதல் பாதி : செம்ம ஃபன் மக்களே, ஆண்கள் தன்னோட பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருக்கும், காமெடி & வசனங்கள் செம்மையா ஒர்க் ஆயிருக்கு, போலி பெண்ணிய & பெரியாரியவாதிகளை அடிச்ச வசனம், ஜாலி ரைட் மக்களே. இரண்டாம் பாதி : நல்லா இருக்கு மக்களே. செம்ம ஜாலியான முதல் பாதி முடிஞ்சு இன்றைய காலத்துக்கு தேவையான களத்தில் இருக்கு இரண்டாம் பாதி. குறிப்பாக ஒரு கோர்ட் சீன் & அங்க விக்னேஷ் காந்த் பேசுற வசனங்கள் யதார்த்தத்தின் நிறம் . பெண்ணியவாதம்னா என்னன்னு ஒரு வசனம் சூப்பர் செருப்படி டூ போலிகள்”
தீபாவளி பெருந்தாக திரைக்கு வந்த டியூட் படத்திற்கு பிறகு இந்த ஆண்பாவம் பொல்லாதது ரசிகர்களுக்கு மற்றும் ஒரு விருந்து.








