• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி !! “

by Tamil2daynews
May 4, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி !! “

 

கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் இன்று சென்னையில் நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
பிளாக்‌ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், “ஜோ” திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் கலை கட்ட தொடங்கியுள்ளது .

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் களமிறங்குகிறார்கள். இன்று தொடங்கி இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

“திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் “ என சொல்லிவிட்டு தன்னம்பிக்கையோடு சிரிக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். இந்தப் படத்திற்கான மக்கள் தொடர்புப் பணிகளை சதீஷ் குமார் மேற்கொள்கிறார்.
Previous Post

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.