• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
August 2, 2025
in விமர்சனம்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம் 

PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர்  நடிக்க, ஃபேண்டஸி ஹாரர் காமெடி ஜானரில் அசத்தலான எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்.

இளம் தம்பதியான தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது பிள்ளை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம், இரு குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விசயங்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன ?, இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன ?, அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? உள்ளிட்ட கேள்விகளுக்கு அறிவியல் அடிப்படையில், எளிமையாக பதில் அளிக்க முயற்சித்திருப்பது தான் ‘ஹவுஸ் மேட்ஸ்’.House Mates' movie review: Fun, breezy fantasy horror-comedy loses steam - The Hindu
பிரபஞ்சம் எப்படி தோன்றியது, அதன் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் முழுமையான பதில் அளிக்கவில்லை. இவை தத்துவார்த்த மற்றும் அறிவியல் தேடல்களின் மூலம் ஆராயப்படுகின்றன. அந்த வகையில், அறிவியலில் நம்ப முடியாத பல விசயங்களுக்கு விடை தேடப்பட்டு வருகிறது. அப்படி ஒரு தேடல் தான் இந்த படத்தின் கதைக்கரு.

படத்தின் கதையை எளிதில் யூகித்துவிடும்படி டிரைலரை வெளியிட்ட இயக்குநர் டி.ராஜவேல், படத்திற்குள் மிகப்பெரிய அறிவியல் ஆச்சரியத்தை வைத்திருப்பதோடு, அதை சுற்றி நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி பார்வையாளர்களுக்கு புரியவும் வைத்திருக்கிறார். ஆனால், அவர் சொன்ன விளக்கம் புரிந்தாலும், ஏற்றுக்கொள்வதற்கான சரியான தீர்வை சொல்லவில்லை என்பது படத்திற்கு சற்று பலவீனமே.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களையும், அதனுடன் பயணிக்கும் கதையின் மாந்தர்களின் உணர்வுகளையும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்கள் மனதில் கடத்தி அவர்களையும் அந்த வீட்டினுள் பயணிக்க வைத்திருக்கிறார்.

ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

மிகவும் சவால் நிறைந்த பணியை படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். கலை இயக்குநர் என்.கே.ராகுலின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், நம்ப முடியாத விசயத்தை கதைக்கருவாக எடுத்துக் கொண்டாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை அறிவியல் அடிப்படையில் அமைத்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.

கிளைமாக்ஸில் சொல்லப்படும் விசயங்களும், அதற்கான தீர்வும் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், வசனங்கள் மூலம் அவற்றுக்கும் தீர்வு கொடுத்திருக்கும் இயக்குநர் ராஜவேல், அதை காட்சிகள் மூலம் விவரித்திருந்தால், பார்வையாளர்கள் முழுமையாக திருப்தியடைந்திருப்பார்கள்.

மொத்தத்தில் இந்த ஹவுஸ் மேட்ஸ்
ஓகேவான ரகம்தான்.
Previous Post

போகி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

கிங்டம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

கிங்டம் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.