• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர். ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படம் பிரம்மாண்டமாக துவங்கியது!! இப்படம் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

by Tamil2daynews
April 7, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர். ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படமான “பெத்தி”  படம் பிரம்மாண்டமாக துவங்கியது!!  இப்படம் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில்  வெளியாகிறது.

 

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியா படமான, “பெத்தி”  ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி”  இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க  படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.  ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர், மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

படத்தின் முதல் ஷாட் ஒரு அற்புதமான சூழ்நிலையுடன் தொடங்குகிறது, மிகப்பெரிய கூட்டம் பெத்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறது. ராம் சரண் ஒரு அற்புதமான, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் பெத்தியாக அறிமுகமாகிறார் , தோளில் பேட்டை சுமந்துகொண்டு, படு ஸ்டைலாக சிகார் புகைத்துக்கொண்டே , கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவர் பேசும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. படுபயங்கர மாஸாக, அதிரவைக்கும் அறிமுகமாகும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
நீண்ட முடி, அடர்த்தியான தாடி மற்றும் மூக்குத்தியுடன் கூடிய ராம் சரணின் புதிய கரடுமுரடான தோற்றம், அவரது கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையை மேம்படுத்துகிறது, மேலும் அவரது ஆளுமைக்கு மேலும் தீவிரத்தைச் சேர்க்கிறது. அவரது டயலாக் டெலிவரி, மற்றும் உடல் மொழி எல்லாமே ரசிகர்களை வசீகரிக்கிறது. விஜயநகர பேச்சுவழக்கை அவர் குறைபாடற்ற முறையில் பேசுவது, ஒரு தனித்துவமான தருணம், இது அவரது வாழ்க்கையில் முதல் முறையாகும், இது அவரது கதாப்பாத்திர சித்தரிப்புக்கு நம்பகத்தன்மையையும் சக்தியையும் சேர்க்கிறது. இந்த ஃபர்ஸ்ட் ஷாட்டில் வரும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் வாழ்க்கைத் தத்துவத்தின் சுருக்கமான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது, இது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியம் தருணமாக அமைகிறது. அவரது கரீஷ்மா “பெத்தி”   கதாபாத்திரத்தை அசத்தலாக வெளிப்படுத்துகிறது.

அசாதாரணமான கதாபாத்திரத்தைத் திரையில் அசத்தலாக உயிர்ப்பிக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநர் புச்சி பாபு பெடி கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு அசைவையும் அற்புதமாக வடிவமைத்துள்ளார், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு மற்றும் பிரம்மாண்டம்  ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரகாசிக்கிறது. ஆர் ரத்னவேலு படம்பிடித்த காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன.  அதே நேரத்தில் அகாடமி விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, காட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.  உலகளாவிய தரத்தில் நம் மண்ணின் கதை திரையில் விரிகிறது.  அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு, பெத்தியின் பழமையான உலகின் சாரத்தைத் திறமையாகப் படம்பிடித்து, ஒரு அற்புதமான அனுபவத்திற்கு மேடை அமைக்கிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலியின் கூர்மையான எடிட்டிங், தடையற்ற கதை ஓட்டத்தை உறுதி செய்கிறது, படத்தின் வேகத்தை இறுக்கமாகவும் ஈடுபாட்டுடனும் வைத்திருக்கிறது.

ராம் சரணின் வசீகரம், வெகுஜனத்தை ஈர்க்கும் நடிப்பு, புச்சி பாபுவின் கூர்மையான எழுத்து மற்றும் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உயர் மட்டத்தை நிர்ணயித்த தொழில்நுட்பக் குழுவுடன், “பெத்தி”   இன் முதல் ஷாட் படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறது. இப்படம் வரும் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக வரும் இந்தப் படம், ஒரு இணையற்ற சினிமா அனுபவத்தையும், அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு முழு விருந்தை வழங்கும் என்று உறுதியளிக்கிறது.

நடிகர்கள் : ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குனர்: புச்சி பாபு சனா
வழங்குபவர்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
பேனர்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர் ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
எடிட்டர்: நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
நிர்வாக தயாரிப்பாளர்: வி.ஒய்.பிரவீன் குமார்

https://youtu.be/XvxlmIGoXuU?si=C9LSZyBGbPZCCQHR

Previous Post

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு

Next Post

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

Next Post

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • வெப்பம் குளிர் மழை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.