• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படமான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது !!

by Tamil2daynews
February 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படமான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது !!

 

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N.  ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க,  பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி” படத்தின், டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் டீசர்  இன்று வெளியாகியுள்ளது.

தமிழில் தொடர்ந்து பிளாக்பஸ்டர்  வெற்றிப்படங்களைத் தந்து வரும் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாகக் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் மீது, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய டைட்டில் லுக் மற்றும் டீசர், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள, சிவகார்த்திகேயன் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள், ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த டீசர் தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும், மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார் வித்யூத் ஜமால். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், சார்பட்டா புகழ் டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் சார்பில் N. ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை கெவின் குமார் மற்றும் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கிறார்கள்.

Previous Post

மறைந்த திரைப்படைப்பாளி பாலுமகேந்திராவின் சினிமா பாரம்பரியத்தின் கடந்தகால பார்வை குறித்த நிகழ்ச்சியை ஐஐஎஃப்சி, வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியது.

Next Post

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

Next Post

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா - டெல்னா டேவிஸ் நடிக்கும் 'லவ் இங்க்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.