• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

by Tamil2daynews
January 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

 

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா,  படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார்.  இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக  அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது.  இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில்  பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை லத்திகா பேசியதாவது…
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப்படத்தில் சின்ன கதாப்பாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். என்னுடன் இப்படத்தில் பயணித்த திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும். பிப்ரவரி 14 இப்படம் திரைக்கு வருகிறது. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
2K லவ் ஸ்டோரியில் எனக்கென்ன வேலை எனக் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் எல்லாம் சுசி சாரின் வேலை தான். இமான் சார் இசையில் படம் இயக்க நினைத்தேன், நான் நடித்த காட்சிக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமை. இப்போது ஜாலியாக இருக்கலாம் ஆனால், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசி சார் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. கண்டிப்பாக இந்தப்படம் அவர் மனதுக்காகப் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார்,  நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு,  அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.  சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல், ஆட்களைக்கூட்டிப்போய்  காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைப்பார்.  பிரேக் பாஸ்ட்டுக்கு முன்னால் ஒரு சீனை முடித்து விடுவார், அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதர் தான். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வருகிறது. எல்லோரும் லவ்வரோடு போய்ப் படம் பாருங்கள் நன்றி.

நடிகர் பாலசரவணன் பேசியதாவது…
எனக்கு இந்த அருமையான படத்தில் வாய்ப்பு தந்த, சுசீந்திரன் சாருக்கு நன்றி. இந்தப்படம் பார்த்து, அத்தனை வேலைகளுக்கு மத்தியில் என்னை அழைத்துப் பாராட்டிய இமான் சாருக்கு நன்றி. 2கே கிட் படத்தில் எனக்கு என்ன வேலை என என் வீட்டிலும் கேட்டார்கள், நான் 2கே கிட்டாக நடிக்கிறேன் என சொல்லவே இல்லை. இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமென நான் நினைக்கவே இல்லை.  சுசீந்திரன் சாருக்கு நன்றி. தனஞ்செயன் சார்  படத்தை வெளியிடுகிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. நாயகன் ஜெகவீர் மிக ஆதரவாக இருந்தார். இப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…
தம்பி சுசி தான் இந்த மேடைக்கு வரக்காரணம். நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசி தான். அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு தந்து, என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது, நான் நன்றாக இருக்கக் காரணம் சுசிதான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்கு தொழில் சுத்தமாகத் தெரியும், அவர்  மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது. இந்தப்படத்தில் எனக்குத் தெரிந்த பலர் நடித்துள்ளனர். எனக்குத் தெரியாத பல புதுமுகங்களும் நடித்துள்ளனர். அனைவருக்கும் இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். இந்த மேடை மிக அன்பாக ஆதரவாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் “பாட்டில் ராதா” பட மேடையில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தமிழ்த் திரைத்துறை உலகம் முழுக்க மதிக்கக் கூடியது. அதை ஆபாசமாக்கக் கூடாது. அவரை பல மேடைகளில் பார்த்து வருகிறேன். தமிழ் ஆளுமைகள் நிறைந்த மேடையில், மிக அநாகரிகமாகப் பேசியது மிக வருத்தமாக இருந்தது. இயக்குநர் பாலாவை, ஐயா இளையராஜா அவர்களை வாடா போடா என்கிறார்.  யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச? மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும். இந்த மேடை போல் அன்பாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது….
என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசி சார் தான். அவருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். எதற்காகவும் கோபப்பட மாட்டார், மிகவும்  அன்பாக இருப்பார். எப்போதும் ஒரே மாதிரி இருப்பார். அவரது இந்தப்படம் டிரெய்லர் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. புதிய ஹீரோ அறிமுகமாகியுள்ளார் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் எழில் பேசியதாவது…
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களும் அத்தனை அற்புதமாக இருந்தது. இத்தனை நடிகர்களை வைத்து, எப்படி இதை எடுத்தார்? என ஆச்சரியமாக உள்ளது.  2கே கிட்ஸை  வைத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்கிற ஆவலும் உள்ளது. இன்றைய இளைஞர்களின் உலகம் புதிதாக இருக்கிறது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் உலகத்திற்குள் நுழைந்து, அடுத்த கட்டத்திற்கு ஒரு படத்தைச் செய்துள்ளார் சுசீந்திரன். நடிகர்கள் எல்லோரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப் பிரமாதமாக உள்ளது. அத்தனை விஷயமும் இப்படத்திற்கு மிக சரியாக அமைந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…
சுசீந்திரன் சாருடன் இது எனது மூன்றாவது படம், ஆனால் எல்லோரும் இங்கு 5வது படம், 6வது படம் என்கிறார்கள், இத்தனை பேருக்கு வாய்ப்பும், வாழ்க்கையும் தந்த சுசி சாருக்கு நன்றி. “கென்னடி கிளப்” படத்தில் எனக்கு நல்ல பாடல்கள் தந்த இமான் சார், இந்த படத்திலும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படம் மிக அழகான படமாக, அருமையான படைப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

அறிமுக நாயகன் ஜெகவீர் பேசியதாவது..,
கடவுளுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்கு இமான் சார்  இசையமைப்பது மகிழ்ச்சி. சுசி சார், இமான் சார், நல்ல கலைஞர்கள் என்பதைத் தாண்டி, நல்ல மனிதர்கள். எங்களது படம் வெளியீட்டிற்காக தனஞ்செயன் சாரிடம் சென்றிருப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் உடன் நடித்த பாலசரவணன், மீனாட்சி எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள். இப்படம் மிக நல்ல படைப்பாக வந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உங்கள் லவ்வரோடு போய்ப் பாருங்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது..,
City light pictures க்கு இந்தப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சுசி சாரின் நல்ல மனதிற்கும், புதிய முயற்சிக்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். சுசி சாருடன் இது எனக்கு 9வது படம். ஒரு இயக்குநருடன் நான் தொடர்ந்து படங்கள் செய்வேன் ஆனால் அது ஒரே மாதிரி படமாகத்தான் இருக்கும், ஆனால் சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்த தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார். கேமரா மிக உயர்தரமாகக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. விஷுவல் நன்றாக இருக்கும் போது தான், இசையும் நன்றாக வரும்.  பாடல்கள் மிக இளமையாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கு என் நன்றி. இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருகிறது மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்த்து விநியோகிக்க வந்துள்ள தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஜெகவீர் மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளனர். அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். பாலா அசால்ட்டாக நடித்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள், எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் மிக அருமையாக இன்றைய தலைமுறை கதையைப் படமாக்கியுள்ளார்.  முதலிலேயே இந்த படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்,   சுசி சார் இந்த படத்தில் என்ன செய்கிறார்? என ஆச்சரியமாக இருந்தது.  சில மாதங்கள் கழித்து,  இந்த படம் பார்க்க முடியுமா? என்று கேட்டார். பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது.  இன்றைய கால இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்.  எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் உலகம் எப்படி இருக்கிறது, என்பதை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் சுசி சார். மிகச்சிறந்த இயக்குநர், நாம் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இணைய வேண்டியது மிஸ் ஆகிவிட்டது ஆனால் இதில் மிஸ் ஆகிவிடக்கூடாது என உடனே நான் செய்கிறேன் என்றேன். படம் பார்த்து இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார், என் கருத்துக்களுக்கு  மதிப்பு தந்தார். இயக்குநர்கள் என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்?, என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால், செய்! என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல்,   நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.  இந்த படத்தில் அனைத்து நடிகர்களுமே மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இமான் சார், மிக இளமையான பாடல்கள் தந்துள்ளார்.  தயாரிப்பாளர் மிகச் சிறப்பாகப் படத்தைத் தயாரித்துள்ளார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த இளமையான டீம் சொல்ல வரும் கருத்து, அனைவருக்கும் பிடிக்கும். அருள் தாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், ஒரு மேடையில் நாகரீகம் மீறி, வாடா, போடா எனக் கொச்சை வார்த்தைகளில் பேசக்கூடாது, மிஷ்கின் என் நண்பர் என்றாலும், அதைக் கண்டித்த அருள்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேடைகளில் எப்போதும் அடுத்தவரைக் காயப்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்,  பாஸிடிவாக பேச வேண்டும். எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம்.  தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த  எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு  ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு

இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு  -V.S.ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இமான்
பாடல் வரிகள்.    – கார்த்திக் நேதா
எடிட்டர் – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
பி.ஆர்.ஓ – சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பாளர் – மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்
தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்

https://youtu.be/k19azk2aBTw
Previous Post

”குடும்பஸ்தன்” – விமர்சனம்

Next Post

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

Next Post

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

Popular News

  • படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

June 16, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

June 16, 2025

படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

June 16, 2025

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 14, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.