ஃபீனிக்ஸ் – விமர்சனம்
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ஃபீனிக்ஸ் . அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
வடசென்னையை கதைக்களமாக கொண்டு ஏற்கனவே பல படங்களில் பேசப்பட்ட ஒரு கதையே ஃபீனிக்ஸ் படத்தின் கதையும். கதை வழக்கமானதாக இருந்தாலும் படத்தில் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆக்ஷன் காட்சிகள்தான். முதல் பாதியில் சூர்யாவுக்கு ஒரு வசனம் கூட இல்லை. ஆனால் ஆக்ஷன் காட்சிகள் என்று வரும்போது சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் ஆக்ஷன் காட்சியில் சூர்யா கடினமான ஆக்ஷன் காட்சிகளில் சூப்பராக நடித்துள்ளார். ஆக மொத்தம் ஃபீனிக்ஸ் படத்தின் கதை திரைக்கதை சுமாராக இருந்தாலும் தனது ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்கிறார்கள் படத்தின் நாயகன் சூர்யா மற்றும் இயக்குநர் அனல் அரசு.
பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய அனல் அரசு இந்த படத்தில் இயக்குனராக அவதாரமெடுத்துள்ள நிலையில், படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் எல்லாம் அனல் தெறிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், சண்டைக் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் திரைக்கதைக்கும் கொடுக்காமல் சுமார் மூஞ்சி குமாராகவே இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில், அதை விட கொஞ்சம் பெட்டராகவே இந்த படம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஹரிஷ் உத்தமன் என மற்ற பிரபல நடிகர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். முதல் பாதி முழுக்க சில வார்த்தைகளை தவிர ஹீரோவின் வாயில் இருந்து எதுவுமே வரவில்லை. கை மட்டும் தான் பேசும் என படம் முழுக்க சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் சூர்யா சேதுபதி.
அடுத்தடுத்த படங்களில் இன்னமும் நல்ல நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து, தன்னை முதலில் ஒரு நல்ல நடிகனாக நிரூபித்துக் கொண்ட பின்னர், ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கலாம். பீனிக்ஸ் – எரிந்து எரிந்து பறக்கிறது!
விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு இதே போல கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்த எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும்.மொத்தத்தில் இந்த படம் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்து.








