• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘லப்பர் பந்து’ – விமர்சனம்

by Tamil2daynews
September 20, 2024
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘லப்பர் பந்து’ – விமர்சனம் 
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. காலி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சேவாக்கைப் போல் கெத்தாக ஓப்பனிங் இறங்கி வாணவேடிக்கை நடத்துபவர் ‘கெத்து’. ஆனாலும், மனைவியின் முன் பெட்டிப் பாம்பாக மடங்கிவிடுவார். காலம் உருண்டோடுகிறது. ஊரிலேயே பெரிய பவுலராக வலம் வருகிறார் அன்பு. ஆனால், அன்புக்கென நிரந்தரமாக ஒரு டீம் இல்லை. அன்புக்கு ஏற்றார் போல் ஒரு காதலி அமைய , விதி ‘கெத்து’ ரூபத்தில் வருகிறது. பேட்ஸ்மேனுக்கும், பவுலருக்குமான ஈகோ யுத்தம் எல்லா ரூபத்திலும் எதிரொலிக்கிறது. ஆண்களுக்குள் இருக்கும் ஈகோவை அவர்களின் காதல் வென்றெடுத்ததா என்பதே லப்பர் பந்தின் மீதிக்கதை.
Lubber Pandhu Movie (Sep 2024) - Trailer, Star Cast, Release Date | Paytm.com
இதுமட்டும் தான் லப்பர் பந்தின் கதையா என்றால் நிச்சயம் இல்லை. பாரம்பரியம் என நம்மில் பலர் சொல்லிக்கொண்டு திரியும் ஜல்லிக்கட்டு முதல் பாகிஸ்தான் என்றால் ‘ இந்தியராய் பெருமை கொள்வோம்’ என ஒன்றிணையும் கிரிக்கெட் வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக நிரம்பியிருக்கிறது சாதி. இங்கு ஒவ்வொரு விளையாட்டிலும் விளையாட மட்டுமல்ல , நுழையவும் ஒரு ‘தகுதி’ தேவைப்படுகிறது. அந்த தகுதி இல்லையென புறக்கணிப்படும் ஒருவர், அதற்கு என்ன செய்கிறார் என்பதை அவ்வளவு அழகாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து. நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனங்கள் மூலம் ஈர்த்தவர் இதில் தன்னை ஒரு தேர்ந்த கதைசொல்லியாகவும் நிரூபித்திருக்கிறார். ” ராஜா ராஜா தான்’ ஆனா இது தேவா’ என நக்கலடிப்பதில் ஆரம்பித்து சிரிக்க படத்தில் அத்தனை விஷயங்களை வசனங்களாக்கியிருக்கிறார்.
Lubber Pandhu trailer: Harish Kalyan, Attakathi Dinesh set for exciting face-off | Entertainment Videos - News9liveகுறிப்பாக பால சரவணணும், ஜென்சனும் மாறி மாறி கலாய்த்துக்கொள்ளும் காட்சி மொரட்டு ஊர் சைடு குளத்துமேடு கிரிக்கெட் ரகம். ஜாதிவெறி இருக்கும் நபர்களைவிடவும், ‘ தம்பி மாதிரி’யென சொல்லி காரியம் சாதித்துக்கொள்ளும் நபர்கள் ஆபத்தானவர்கள் என சொல்லும் இடமும் சரி, கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு குடும்பத்தில் இரு பெண் சம்பந்திகள் பேசிக்கொள்ளும் இடமும் சரி இயக்குநரின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. படத்தின் அடிநாதம் அரசியல் தான் என்றாலும் அது எங்கேயும் துருத்தாமல், இயல்பாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இவ்வளவு இயல்பான ஒரு சினிமாவை தமிழில் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. சின்ன சின்ன கதாபாத்திரங்கள்கூட முழுமை அடையும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது லப்பர் பந்தின் திரைக்கதை . வெட்டி ஈகோவுக்கு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் படும் அவஸ்தைகள் ; கலப்புத் திருமணங்கள்; மக்கள்; என எல்லாவற்றையும் அழகியலோடு படைத்ததற்கு வாழ்த்துகள் தமிழரசன். ஆண்களுக்குள் இருக்கும் ஈகோவை பதிவு செய்த படத்தில் பெண் கதாபாத்திரங்களை இவ்வளவு வலிமையாக படைத்ததற்குக் கூடுதல் பாராட்டுக்கள்.
கெத்தாக அட்டக்கத்தி தினேஷ். முதல் பந்து சாமிக்கு விடும் தோரணையில் ஆரம்பித்து இந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அருமையாக பொருந்தியிருக்கிறார். மகளின் ஆசைக்கு எதிராக தானே குற்றவுணர்ச்சியுடன் காய் நகர்த்தும் காட்சியாகட்டும், மனைவிக்காக ஏங்கி நிற்கும் காட்சியாகட்டும் இது தினேஷின் செகண்டு இன்னிங்ஸ். ‘நயா பைசாவுக்கு பிரயோசனமில்ல. ஆனாலும் இந்த வரட்டுக் கவுரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல’ என இளவட்டு ஈகோ கதாபாத்திரங்களுக்கென்றே அளவெடுத்தது செய்தது போலிருக்கிறார் ஹரிஷ் கல்யாண். ‘பார்க்கிங்’கில் காருக்கு சண்டை போட்டவர் இந்த முறை பந்துடன் களமிறங்கியிருக்கிறார். ஈகோவை ஈகோவால் சீண்டும் தருணங்களில் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு சிறப்பு. ஹீரோக்களுக்கு இணையான ரன்னர்களாக பாலசரவணனும், ஜென்சனும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ஆண்களுக்குள் இருக்கும் ஈகோ; கிரிக்கெட் என்பதைக் கடந்து இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக இருந்ததற்குக் காரணம் பெண் கதாபாத்திரங்கள். பார்வையிலேயே கட்டிப்போடும் ஸ்வாஸிகா அப்படிப்பட்டதொரு தேர்வு. பிரமாதப்படுத்தியிருக்கிறார். எல்லா கிராமங்களிலும் இப்படியான நபர்களைக் காண முடியும். தனக்கு எதிராக அப்பா எதுவும் செய்துவிடமாட்டார் என நம்பும் மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அத்தனை பொருத்தம். சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும் காளி வெங்கட், கர்ணன் ஜானகி, கீதா கைலாசம் கவனம் ஈர்க்கிறார்கள்.
Lubber pandhu Review | காதல்... கிரிக்கெட்... எத்தனை மாசம் ஆச்சு தமிழ்ல இப்படி ஒன்னு பார்த்து..?படத்தின் பெரும்பலம் பின்னணி இசை. இருவருக்குமான ஈகோ வெடிக்கும் மைதானத்தில் சான் ரோல்டனின் பின்னணி இசை அருமை. மோகன் ராஜனின் வரிகளில் ‘சில்லாஞ்சிறுக்கியே’ நல்லதொரு மெலடி. தினேஷுக்கு வரும் ரெட்ரோ பழைய பாடல் அட்டகாசம். படத்தில் அந்தப் பாடலையும், அதையொட்டிய விஷயங்களை வைத்தே ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அருமை. ஸ்போர்ட்ஸ் படத்துக்கான விஷயங்களை சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறது தினேஷின் கேமரா. எங்கேயும் எதையும் மிஸ் செய்யாமல், தொய்வாகவும் இல்லாமல் அட்டகாசமான கட்டாக வெளிவந்திருக்கிறது. மதனின் படத்தொகுப்பு அருமை.
கிரிக்கெட்டும்,காதலும் இரு ஆண்களின் ஈகோவை என்ன செய்யும் என்பதை ஒரே பந்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் . சூப்பர் வாழ்த்துக்கள்.
Previous Post

‘நந்தன்’ – விமர்சனம்

Next Post

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’

Next Post

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

Popular News

  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.