ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபுதேவா திகழ்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகிருக்கும் படம் ஜாலியா ஜிம்கானா. இந்த படத்தில் அபிராமி, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார்.
மேலும், பவானியின் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர்களால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே தாத்தா, வழக்கறிஞர் பூங்குன்றனை சந்தித்து பிரச்சனையை சொல்ல சொல்கிறார். பவானி குடும்பமும் பூங்குன்றனின் உதவியை கேட்டு போகிறார்கள். ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பவானி குடும்பம் முயற்சிக்கிறது.
எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்று முதலிலேயே சொல்லிவிட்டார். சில இடங்களில் யோகி பாபுவின் காமெடிகள் ஒர்க் அவுட் ஆனாலும் சில இடங்களில் பெரிதாக கவரவில்லை. இவரை அடுத்து படத்தில் வரும் ஜான் விஜய், ரோபோ சங்கர், எம்எஸ் பாஸ்கர் எல்லோருமே சிரிக்க வைக்க ரொம்பவே மெனக்கட்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்லணும். குறிப்பாக, படத்தில் அபிராமியினுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். அஸ்வின் விநாயகமூர்த்தியின் உடைய இசை நன்றாக இருக்கிறது. குறிப்பாக, போலீஸ்காரனா கட்டிக்கிட்டா பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. திரைக்கதை சளிப்படையை செய்தாலும் யோகி பாபுவினுடைய காமெடியும், அவர் கேட்கும் கேள்விகளும் நம்மை ஆறுதல் செய்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.
பிரபுதேவாவின் நடிப்பு ஓரளவுக்கு ஓகே என்ற ரகம் தான்.மற்றபடி மடோனா செபாஸ்டியன், அபிராமி வழக்கம் போல தங்கள் நடிப்பில் நிறைவை தருகிறார்கள்.
படத்தின் மெயின் ஹீரோ என்றால் இசைதான் பாடல்களும் சரி பின்னணி செய்யும் சரி பின்னி எடுத்து இருக்கிறார்.