• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!

by Tamil2daynews
May 30, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!
இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில்  பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது.
இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது….
“எங்களின் இந்த  கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து  மக்கள் விரும்பும்  கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தக் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகும். பிரம்மாண்டமான அளவில், மிக ஆழமும் கற்பனையும் ஒன்றிணைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இது மக்கள் மனங்களில் சக்திவாய்ந்ததும், நிலைத்தும் இருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.”இதனைத் தொடர்ந்து நடிகர் ஹிர்திக் ரோஷன் கூறியதாவது….
“ஹொம்பாலே பிலிம்ஸ் பல தனித்துவமான கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து ஒரு வெகு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் திரைப்படத்தில் பணியாற்ற மிக ஆவலாக உள்ளேன். நாங்கள் பெரிய திரைக்கனவுகளைக் காண்கிறோம் மற்றும் அதை நனவாக்க உறுதியாக இருப்போம். ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.”
கடந்த சில ஆண்டுகளில், பான்-இந்தியா அளவில் பெரும் வெற்றிப் படங்களை வழங்கி, ஹொம்பாலே பிலிம்ஸ் இந்தியாவின் முன்னணி  தயாரிப்பு நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது. கேஜிஎப்: பார்ட் 1 மற்றும் 2, சலார்: பார்ட் 1 – சீஸ்‌ஃபயர், மற்றும் காந்தாரா போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, அவர்கள் கதைக்களத்திலும், வசூலிலும் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளனர்.

மற்றொரு புறம், ஹிர்திக் ரோஷன் இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். அவரது தனித்துவமான நற்சிறப்பும், மாபெரும் திரை நேர்த்தியும், சிறந்த நடிப்பும் அவரை உயரத்தில் நிறுத்தியுள்ளன. வார் 2 மற்றும் க்ரிஷ் 4 போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களுடன், அவர் மிக வலுவான வருங்கால திரைப்பட வரிசையைக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஹொம்பாலே பிலிம்ஸும் ஹிர்திக் ரோஷனும் இணைகிறார்கள் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புதிய உச்சத்துக்கே சென்றுள்ளது!

Previous Post

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Next Post

48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!

Next Post

48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!

Popular News

  • ‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.