• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரவினில் ஆட்டம் காட்டும் நிழல் உலக நாயகன் !

by Tamil2daynews
October 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இரவினில் ஆட்டம் காட்டும் நிழல் உலக நாயகன் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ‘ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும்.

அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது.

இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியுள்ளார் ஏ. தமிழ்ச்செல்வன்.

இப்படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகன் நிலையில் மாரா  ராஜேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக கிரேசி வருகிறார். இவர் சன் டிவியில் வரும் மல்லி, திருமகள் தொடர்களில் நாயகியாக நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார் பாடல்கள் -செல்வராஜா . சண்டைக் காட்சிகளுக்கு எஸ். ஆர். ஹரிமுருகனும் நடனத்திற்கு ஸ்டைல் பாலாவும் பொறுப்பேற்றுள்ளனர்.படத்தொகுப்பு எஸ் ஆர் முத்து கொடாப்பா.

சேலம் ஏற்காடு பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளார்கள்.ஏற்கெனவே படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி பிரபலமாகி படத்திற்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. இப்படத்தில் இடம்பெற்ற ‘கருங்கூந்தல் அழகுக்காரி ‘பாடல் சமூக ஊடகங்களில்  பிரபலமாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளிப் பண்டிகை தாண்டி நவம்பர் எட்டாம் தேதி ‘இரவினில் ஆட்டம் பார் ‘ திரைப்படம் வெளியாகத் தயாராக உள்ளது.
Previous Post

சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன பாத்தியே” பாடல் ; கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பாடி வெளியிட்டார்!

Next Post

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

Next Post

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

Popular News

  • சன் நெக்ஸ்ட் தளத்தில் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. – பிரம்மாண்டமாக தொடங்கிய ஜாலி ஓ ஜிம்கானா

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

May 8, 2026

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

May 8, 2026

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

May 8, 2026

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

May 8, 2026

29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

May 8, 2026

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

May 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.