• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

by Tamil2daynews
December 1, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

 

நடிகர் அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது  டப்பிங்கை தொடங்கியுள்ளார்.
இயக்குநர் மு. மாறன் கூறும்போது, “திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங் தொடங்கி இருக்கிறார்.  விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்” என்றார்.

எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம்- டிராமா கதைதான் ‘பிளாக்மெயில்’. இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   டி. இமான் இசையமைக்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பிளாக்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த  கோகுல் பெனாய் படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.

Previous Post

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

Next Post

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் ‘பரமசிவன் பாத்திமா’, காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது

Next Post

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.