• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

by Tamil2daynews
December 1, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ  டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

 

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.  இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என  சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட திரு.  எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது. வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தென் இந்திய அளவில் சிறந்த நடிகராக வலம் வரும் திரு எஸ்  ஜே . சூர்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

அதேபோல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க  வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் திருமிகு புல்லேலா கோபிசந்த் அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது.இவர் இந்தியாவில் பெரிதும் பிரபலமடையாத பேட்மிண்டன் விளையாட்டில் கால்பதித்து சாதித்ததோடு தன் மாணவர்களையும் வெற்றி கனியை எட்ட உத்வேக படுத்தினார். இவரின் இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள்  வழங்கியுள்ளது . இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

அதேபோல் தொழில்துறையில் குறுகிய காலத்தில் 700 கடைகளுடன் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்,  நேச்சுரல்ஸ் குழும அழகு நிலையங்களின்  உரிமையாளர் திரு.சி.கே.குமரவேல்.  1000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டுவரும் திரு சி கே . குமரவேல்  அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் MHRD ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட VISTAS, சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வரையிலான திட்டங்களை வழங்குகிறது . இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மேலும் ஒரு சாதனையாக மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் NAAC  A++ தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Previous Post

சொர்க்கவாசல் – விமர்சனம்

Next Post

ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

Next Post

ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' & 'கண்ணை நம்பாதே' படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.