“ராட்சசன்”வில்லன் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படம் “குற்றப் பின்னணி”
தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக்கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே குற்றப்பின்னணி.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆறாவது படம் குற்றப்பின்னணி.
வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு-
சங்கர் செல்வராஜ்
இசை – ஜித்
பாடல்கள்-
என்.பி.இஸ்மாயில், ஜாபர் சாதிக்
எடிட்டிங்- நாகராஜ்.டி
சண்டைப்பயிற்சி-
ஆக்ஷன் நூர்
தயாரிப்பு-
ஆயிஷா – அகமல்
வசனம் – ரா.ராமமூர்த்தி
கதை திரைக்கதை இயக்கம்-
என்.பி. இஸ்மாயில்
பழனி,நாகர்கோவில், ஆலப்புழா போன்ற இடங்களில் மூன்று கட்ட படப்பிடிப்பாக 42 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது.

குற்றப்பின்னணிக்கு பின்னணி இசை பக்கபலமாக உள்ளது. படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
சென்னைக்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.
இப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார்.
விரைவில் வெளிவருகிறது.