• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சாரி’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

by Tamil2daynews
October 31, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சாரி’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

 

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அவரது பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அவர் இயக்கிய ‘பூத்’ திரைப்படம் பல நகரங்களில் ஹாலோவீன் விழாவிற்காக மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இளம் திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் வெளியாகும் ‘சாரி’ திரைப்படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது.  இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல த்ரில்லர் தருணங்களுடன் ‘சாரி’  இருக்கும்.

ஆர்வி புரொடக்ஷன் சார்பில் ராம் கோபால் வர்மா மற்றும் ரவி வர்மா தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

Previous Post

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.