• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான “ரவுது கா ராஸ்” இப்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!

by Tamil2daynews
July 5, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான “ரவுது கா ராஸ்”  இப்போது ZEE5 தளத்தில்  ஸ்ட்ரீமாகிறது !! 

 

இந்தியா,  02 ஜூலை 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது சமீபத்திய நேரடி-டிஜிட்டல் படமான ரவுது கா ராஸ் படத்தை வெளியிட்டுள்ளது. ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாட் ஃபிஷ் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில்,  ஆனந்த் சுரபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த பரபரப்பான திரில்லர் படத்தில், போலீஸ் அதிகாரி தீபக் நேகியாக, பிரபல  நடிகர் நவாசுதீன் சித்திக் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். உத்தரகாண்டில் உள்ள ரௌது கி பெலி என்ற அழகிய கிராமத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் “ரவுது கா ராஸ்” படத்தில்  மீண்டும் இணைந்துள்ளனர் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கொலையே நடந்திராத ஒரு கிராமத்தில், திடீரென பார்வையற்ற பள்ளியில் வார்டன் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.  SHO தீபக் நேகி (நவாசுதீன் சித்திக்) மற்றும் இன்ஸ்பெக்டர் டிம்ரி (ராஜேஷ் குமார்) உள்ளிட்ட அவரது குழு, இந்த மர்மமான கொலை விசாரணையில் இறங்குகின்றனர். இத்திரைப்படம் சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவையின் தனித்துவமான கலவையைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. கடந்த ஆண்டு 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI)  பிரீமியரின் போது இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்நிலையில் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது.

இது குறித்து நவாசுதீன் சித்திக் பகிர்ந்துகொண்டதாவது, “நான் கிரைம் திரில்லர்கர்களின்  ரசிகன், எனவே, இந்தப் படம் ஒரு தனித்துவமான திருப்பத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பார்வையாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். உண்மையில் ரவுது கா ராஸை வேறுபடுத்துவது நகைச்சுவையான கதாபாத்திரங்களும் மற்றும் அசாத்தியமான திரைக்கதையும் தான்.   ஒரு கிராமத்தில் நிகழும் கொலையை, போலீஸ் எவ்வளவு சோம்பேறியாக  விசாரிக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது இப்படம். 190+ நாடுகளில் உள்ள ZEE5 இன் பார்வையாளர்களை இந்தப் படம் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்”

“ரவுது கா ராஸ்” படத்தை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகக் கண்டு ரசியுங்கள் !
Previous Post

சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது!

Next Post

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ‘ஜமா’!

Next Post

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் 'கூழாங்கல்' தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி 'ஜமா'!

Popular News

  • படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

June 16, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

June 16, 2025

படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

June 16, 2025

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 14, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.