இது ஒரு நல்ல படமா அல்லது சமுதாயத்தை சீர்குலைக்க செய்யும் படமா இல்ல இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையில் வந்திருக்கும் படமா என்பதை விமர்சனத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தன் மகள் சாம்(லிஜோமோல் ஜோஸ்) காதலிக்கும் நபரை பார்க்க ஆவலாக இருக்கிறார் லக்ஷ்மி(ரோகிணி). மகள் தன் துணையை அழைத்து வரும்போது அவரின் அப்பாவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார் லக்ஷ்மி. அதனால் பிரிந்து சென்ற முன்னாள் கணவரான தேவராஜை(வினீத்) வீட்டிற்கு வரச் சொல்கிறார். சாம் சிறுமியாக இருந்தபோதே அப்பாவும், அம்மாவும் பிரிந்துவிட்டார்கள்.

இந்நிலையில் சாம், நந்தினி இடையே எப்படி காதல் ஏற்பட்டது என்பதை பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். நந்தினி விஷயத்தில் அம்மாவை மட்டும் அல்ல இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது திடீரென்று வந்து உன் பிரச்சனையை தீர்க்க முடியும் என சொல்லும் அப்பாவையும் சேர்த்து சமாளிக்க வேண்டி இருக்கிறது.
படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சாமாக அற்புதமாக நடித்திருக்கிறார் லிஜோமோல் ஜோஸ். லக்ஷ்மியாகவே வாழ்ந்திருக்கிறார் ரோகிணி. தேவராஜாக பொருத்தமாக இருக்கிறார் வினீத். நந்தினி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் அனுஷா பிரபு. கலேஷின் காமெடி கை கொடுத்திருக்கிறது.