சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள “அகமொழி விழிகள்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி வெளியிட்டார்.
இந்த போஸ்டரில், கையில் ஸ்டிக்குடன், அழுத்தமான பார்வையுடன், நாயகன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக “சச்சு கிரியேஷன்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் வலைத்தளத்தை, ஜென்டில்மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனர், மெகா தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் துவங்கி வைத்தார். தற்போது முன்னணி நட்சத்திர தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிக்கும் “அகமொழி விழிகள்” படத்தினை சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் பின்னணி இசையைக் கையாண்டுள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தற்போது படத்தினை திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்ப குழு விபரம்