• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தி அக்காலி – விமர்சனம்

by Tamil2daynews
June 3, 2024
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தி அக்காலி – விமர்சனம்

 

போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க, போலீஸ் அதிகாரி ஜெய்குமார் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் போலீஸ் குழுவுக்கு கிடைக்கிறது. காவல்துறையினர் மயானத்தை சோதனையிட, பல அதிர்ச்சிகமரான உண்மைகள் வெளியாகின்றன.

அதாவது சாத்தானை வழிபடும் குழுவினர், மயானத்தில் விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும், போலீஸ் அதிகாரி ஜெய்குமாருக்கு தெரிய வருகிறது.

மேலும் அவர்விசாரிக்கும் போது, அந்த கொடூர குழுவின் பின்னணியும் பல மர்ம மரணங்களும் தெரிய வருகிறது.

இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார் என்பதே மீதிக் கதை. அதே நேரம், ஒரு கமா போட்டு அடுத்த பாகத்துக்கும் அடிபோட்டு இருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், கிறிஸ்துவ மத போதகராக நடித்திருக்கும் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்துள்ளனர்.

குறிப்பாக பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பு மிரட்டல்.

மானுஷ்ய படத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரி முர்பி. கலை இயக்குநர் தோட்டா தரணியும் சிறப்பாக செட்கள் அமைத்து உள்ளார். wfx காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளன. இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்.

எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலியை அடிப்படையாக வைத்து, சஸ்பென்ஸ் குறையாமல் முழு நீள படத்தை அளித்து இருக்கிறார்.

மொத்தத்தில் தி அக்காலி படம் மிரட்டலும் பயமும் குறைவுதான்.
Previous Post

அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

Next Post

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.