• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கும்கி-2 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
November 19, 2025
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கும்கி-2 – விமர்சனம் 

இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி அடைந்த கும்கி படத்தை அடுத்து சில வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் வந்திருக்கின்றது.

வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான்.

இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது.

சிறுவன் இளைஞராக வளர்ந்ததும் அந்த வேடத்தில் அறிமுக நாயகன் மதி தோன்றுகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டி தொலைந்து போக நாயகன் மதியும் மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. ஐந்து வருடம் கழித்து திரும்பி வந்த மதி கண்ணில் யானை பட்டுவிட மீண்டும் நட்பு தொடர்கிறது.

ஆனால் சர்வ லட்சணங்களும் (!) அமையப்பெற்ற அந்த யானையை தமிழ்நாட்டு முதலமைச்சர் (?) தன் அரசியல் எதிரியை ஒழிக்க, கஜ பலி கொடுக்க நினைக்கிறார்.
Movie review : Kumki 2

நட்பு வென்றதா, நயவஞ்சகம் வென்றதா என்பது மீதிக் கதை.

அறிமுக நாயகன் மதி எந்தப் பதட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். அதுவும் முதல் படத்திலேயே யானையுடன் நடிப்பது என்பது சவாலான விஷயம். அதையும் ஏற்று திறம்பட நடித்திருப்பவர் இனிவரும் காலங்களில் கவனமாக இருந்தால் முன்னணி ஹீரோவாகலாம்.

கதாநாயகி என்றால் அவர் நாயகனுடன் ஜோடி போட வேண்டுமென்ற அவசியமிலலை என்கிற அளவில் ஷிரிதா ராவ், சவுண்ட் இன்ஜினியராக வந்து சத்தம் இல்லாமல் கவர்கிறார்.

சி. எம்மின் உதவியாளராக வரும் ஆகாஷ், அவர் உதவி கோரும் வில்லன் அர்ஜுன் தாசின் நடிப்பு மிரட்டுகிறது.

ஆண்ட்ரூஸ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத்  உள்ளிட்ட பிற வேடங்களில் வருபவர்கள் அவற்றை நிறைவாக நிரப்புகிறார்கள்.

ஒளிப்பதிவு  எம்.சுகுமார் என்றாலே அண்ணா அண்ணாந்து பார்க்கும் அருவிகளை ஆகாசத்தில் இருந்து பார்க்கலாம். மிரட்டலான ஒளிப்பதிவு.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் தரம்.

எழுதி இருக்கி இருக்கும் பிரபு சாலமனிடம் இன்னும் எதிர்பார்த்தோம். அத்துடன் யானையும் மதியும் நட்பாக இருக்கிறார்கள் என்பதை ஒரு காட்சியில் சொன்னால் போதாதா..? அவர்கள் இருவரும் வரும் எல்லா காட்சிகளும் யானைக்கு மதி முத்தமிட்டுக் கொண்டே இருப்பது. ஒரு கட்டத்தில் “உவ்வே..!”

முதல் பாகத்தை ஒப்பீடு செய்யாமல் பார்த்தால் இந்த படத்தை ரசிக்க முடியும்.

முதல் பாகத்திற்கும் இதற்கும் சம்பந்த படுத்தாமல் பார்த்தால் படம் ஓகே.
Previous Post

வன்முறை இல்லாமல் படம் எடுக்க முடியாதா ? ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்பட விழாவில் வி.சி.க தலைவர் தொல் .திருமாவளவன் கேள்வி!

Next Post

‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது

Next Post

'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.