அரபு நாட்டை அதிரவைத்த ‘இந்தியன் – 2’
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஜூலை 12ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் தான் இந்தியன்-2.
இத் திரைப்படத்திற்கு பல்வேறு விதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் துபாயில் ஸ்கை டைவ் என சொல்லப்படும் விமானத்தில் இருந்து வான் வெளியில் குதிக்கும் சாகச நிகழ்ச்சியை இந்தியன் 2 படத்துக்கு துபாய் பாம் சுமைரா கடலுக்கு மேல் வான் வெளியில் நடத்தி இருக்கிறார்கள்.
இந்த சாகச விமானத்திலிருந்து வீரர்கள் குதிக்கும் பொழுது இந்தியன் 2 பட போஸ்டரை எல்லோரும் பார்க்கும் படி விரித்து குதித்து சாகசத்தில் ஈடுபட்ட போது பார்த்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும் இதை நாம் பார்க்கும் பொழுது முதல் பாகத்தில் கமலஹாசன் பேசிய அந்த வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது இந்தியனுக்கு அழிவே இல்லை என்கிற அந்த வசனம் எல்லோரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சாகச நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்னாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரத்துக்கே இவ்வளவு பிரம்மாண்டம் என்றால் திரைப்படத்தில் எவ்வளவு இருக்கும் ஜூலை 12 முதல் வெள்ளித் திரையில் ஓர் பிரம்மாண்டம் இந்தியன் 2.