• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், “ககனச்சாரி” திரைப்படம் !!

by Tamil2daynews
July 5, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், “ககனச்சாரி”  திரைப்படம் !!

 

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிக்கார், அஜு வர்க்கீசு மற்றும் KB கணேஷ்குமார் நடிப்பில், டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், ஜுலை 5 வெளியாகயுள்ள மலையாளத் திரைப்படம் “ககனச்சாரி”. இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளது.

“ககனச்சாரி”  சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்ட நிலையில், திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் சுரேஷ் கோபி.

பிரபல முன்னணி மலையாள நடிகர் சுரேஷ்கோபி அவர்களின் மகன் கோகுல் சுரேஷ், ககனச்சாரி படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமையான களத்தில், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், நேற்று சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் சுரேஷ்கோபி, படக்குழுவினரைப் பாராட்டி , தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
கேரளாவில் இயற்கை பெருமளவு அழிந்து போன 2040 ஆம் ஆண்டில், மூன்று மனிதர்களிடம் ஒரு ஏலியன் பெண் அடைக்கலமாகிறாள். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளைக் கலகலப்பான காமெடியுடன், புதுமையான திரைக்கதையில், புதுமையான களத்தில் சொல்லியிருக்கும் இப்படம், திரைவிழாவில் திரையிடப்பட்டு   பெரும் வரவேற்பைப் பெற்றது.  தற்போது முன் திரையிடல்களில் விமர்சகர் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 21ஆம்  தேதி கேரளாவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் இந்தியா முழுவதும்  வெளியிடுகிறது.
Previous Post

அரபு நாட்டை அதிரவைத்த ‘இந்தியன் – 2’

Next Post

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே. மாணிக்கம் தயாரிப்பில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரில்லர் படப்பிடிப்பு நிறைவு

Next Post

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே. மாணிக்கம் தயாரிப்பில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் 'ரெட் ஃப்ளவர்' ஆக்ஷன் திரில்லர் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.