படம் வெளியானதும் பெண் ரசிகைகளை அதிகம் கவரப்போகும் ‘மிஸ் யூ’ நாயகி
7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்சன்ஸ் (7 Miles per second productions) சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மிஸ் யூ’.
கருணாகரன், பாலசரவணன், ‘லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார். பாடல்களை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறும்போது, “ஆண்-பெண் நட்பு, அன்பு, காதலை பற்றி சினிமாவில் சொல்வதற்கு இன்னும் தீராத அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது. காதல் வரும்போது அழகாக மாறும் நம் உலகம், அதன் தோல்வியை பார்க்கும்போது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அப்படி ஒரு லவ் பிரேக்கப்பிற்கு பிறகு பிடிக்காமல் போய்விட்ட பெண்ணோடு ஒரு சாமானிய இளைஞனுக்கு வரும் காதல் தான் இந்தப்படத்தின் கதை.
மீண்டும் ஒரு நிஜமான காதல் படத்திற்காக சினிமா விரும்பிகள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சித்தார்த், இந்தக்கதையை கேட்டதும் உடனே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். நாயகி சுப்புலட்சுமியாக கன்னட, தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஆஷிகா ரங்கநாத் தமிழில் அறிமுகமாகிம் இவரை “மிஸ் யூ” படம் வெளியான பிறகு பெண்களே லவ் யூ என சொல்லும் விதமாக ரசிகர்களை கவருவார்.









