• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழகத்தின் அவல நிலையை ‘கலன்’ மூலம் இயக்குநர் வீரமுத்து படம் பிடித்து காண்பித்திருக்கிறார் – எச்.ராஜா பாராட்டு

by Tamil2daynews
January 2, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழகத்தின் அவல நிலையை ‘கலன்’ மூலம் இயக்குநர் வீரமுத்து படம் பிடித்து காண்பித்திருக்கிறார் – எச்.ராஜா பாராட்டு

ராஜலெக்‌ஷ்மி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கலன்’. தீபா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு டிசம்பர் 31 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் பத்திரிகையாளர், நடிகர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துக் கொண்டார்கள்.

படம் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய எச்.ராஜா, “இன்றைய தினம் தமிழகத்தின் அவலமான நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். இதற்கு முன்பு கிடுகு என்று படத்தை எடுத்திருந்தார். இன்றைக்கு தமிழகத்தின் சீர்கேட்டுக்கு காரணமாக இருப்பது போதை, அந்த போதையினால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள், அதனால் தான் சமூக பாதிப்பு ஏற்படுகிறது. அதை தத்ரூபமாக கலன் மூலம் நமக்கு வீரமுருகன் சொல்லியிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், கடைசியில் ஒரு மாரல் சமுதாயத்திற்கு காவல்துறையின் கைகள் கட்டப்படாமல் இருக்குமானால், அவர்கள் காவல் தெய்வங்களாக மாறுவார்கள், அது அப்படி இல்லை. அது மாற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். கலம் நல்ல படம், நல்ல கதை. எனவே அதற்காக இந்த படத்தை பார்த்து மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பத்து நாட்களாக தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் விசயம் இந்த படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது. ஞானிகள் சொன்னால் நடக்கும் என்று சொல்வார்கள், அது போல் பெரிய ஞான உதயத்தோடு, இன்று நடக்கும் விசயத்தை படத்தில் வைத்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விச்யம், மக்கள் மனதில் இன்று பசுமையாக இருக்கும் போது, இந்த படத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் அல்ல அச்னைத்து சமுதாய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வருங்கால தலைமுறையை போதைப் பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து சமுதாயத்தை காப்பாற்றும் ஒரு முயற்சியாகவே இந்த படத்தை நான் பார்க்கிறேன்.

அதே சமயம், 2014 ஆம் ஆண்டு ரெட் போர்ட்டில் கொடியேற்றி விட்டு பிரதமர் மோடி அவர்கள் சொன்ன ஒரு விசயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. பெண் குழந்தைகள் லேட்டாக வந்தால் கேட்கிறோம், அவர்களை கண்டிக்கிறோம். ஆனால், ஆண் குழந்தைகளை அப்படி கேட்கிறோமா? இல்லை. ஆனால், ஆண்குழந்தைகளை தான் நாம் கண்டித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காது. சமுதாயம் திருந்த வேண்டும், அதற்கான படமாக இது இருக்கும். தமிழ் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும், அதற்கான ஒரு படமாக ‘கலன்’ இருக்கும்.” என்றார்.

பயில்வான் ரங்கநாதன் படம் பற்றி பேசுகையில், “இந்த படத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டி மற்றும் தீபா இருவரும் என் ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரண்டு பேரும் படத்தில் காட்டப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.  அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் பற்றி படத்தில் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி படத்தில் சேர்க்க வெண்டும் என்பது என் கோரிக்கை.

படத்தில் வயலன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது, அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் அது கதைக்கு தேவை என்பதால் தவிர்க்க முடியாது என்பதையும் மறுக்க முடியாது. அதேபோல், சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது, என்பதையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்துக் கொள்கிறேன்.” என்றார்.

படத்தின் நாயகன் அப்புக்குட்டி பேசுகையில், “’கலன்’ சமுதாயத்திற்கு அவசியமான படமாக இருக்கிறது. படத்தை பார்த்து பத்திரிகையாளர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற படத்தை மக்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் வீரமுருகன் பேசுகையில், “இன்று நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி தான் படத்தில் பேசியிருக்கிறோம். குறிப்பாக போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு ஆகியவற்றை பற்றி தான் படம் பேசுகிறது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சாதி குறியீடு மற்றும் வயலன்ஸ் அதிகமாக இருப்பதாக சில கருத்துக்கள் வருகிறது. எதையும் திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் சொல்லவில்லை. நிஜத்தில் நடந்த சம்பவங்கள், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை சுற்றி தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வலங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். மக்கள் இதுபோன்ற நல்ல படங்களுக்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள், என்று நம்புகிறேன்.” என்றார்.
Previous Post

மீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம் ‘ புகழ் யாஸ்மின் பொன்னப்பா

Next Post

பயாஸ்கோப் – விமர்சனம்

Next Post

பயாஸ்கோப் - விமர்சனம்

Popular News

  • டைரி – விமர்சனம்

    பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது ” தடை அதை உடை ” படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.