‘800’ – விமர்சனம்
சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாது ஒரு மனிதனாகவும் பில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது பயணம் தடைக்கற்களைத் தாண்டி வந்த கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பது மற்றும் தடைகளை எதிர்த்துப் போராடுவது, அதன் மூலம் கிடைத்த நிலையான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கனவுகளை நிறைவேற்றுவது என அவரின் வெற்றி பல நபர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. தற்போது எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய ’800’ மூலம் அவரது இன்ஸ்பையரிங்கான வாழ்க்கை கதை படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் அதை படமாக்கப்பட்ட விதமும் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

நாட்டுக்காக உழைக்கும் ஒரு வீரர் முன்னேற வேண்டுமென்றால் பலர் அடிகளையும் பல வழிகளையும் தாங்கி தான் முன்னேறி இருக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது இந்த படம்.
மொத்தத்தில் இந்த படம் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது