• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ – விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு கவுரவம்..!!

by Tamil2daynews
January 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ – விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு கவுரவம்..!!

 

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.

இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள்.  மேலும் இந்நிகழ்வில்  வேளாண் துறைசார்  வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது.

இதில்

Image

• உழவர்களின் விளைப் பொருட்களுக்கு நல்ல விலை பெற்று தரும் மதுரை, திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமிகு. வெங்கடேஷ் அவர்களுக்கு உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான விருதும்

• விவசாயிகளை பற்றியும் அவர்கள் விளைப் பொருட்கள் பற்றியும் முக்கியமாக பெண் விவசாயிகள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் திருமிகு. அபர்ணா கார்த்திகேயன் அவர்களுக்கு சிறந்த வேளாண் ஊடகவியலாளருக்கான விருதும்

• நிலமற்ற பெண்கள் ஒன்றிணைந்து  தரிசு நிலத்தை ஒரு கூட்டுப் பண்ணையாக மாற்றிய பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்திற்கு சிறந்த உழவர் கூட்டமைப்புக்கான விருதும்Image

• பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராடி தனி குடியிருப்பும் அவர்களின் வேளாண் பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்க தொடர்ந்து பங்காற்றி வரும் பழங்குடி சமூகப் பெண் திருமிகு. ராஜலெட்சுமி அவர்களுக்கு, வனம் சார்ந்த மக்களின் வேளான் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான விருதும்

• பல்வேறு நீர் நிலைகளை சீரமைக்க பெரும் பங்காற்றிய திருமிகு. சித்ரவேல் அவர்களுக்கு நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்புக்கான   விருது வழங்கும்  கெளரவிக்கப்பட்து.

ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும்  வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது,“ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.Image

சினிமா, விளையாட்டு  உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய  இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம்.

இது 5 வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின்  மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம்.

வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கெளரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும் எனவும் கூறினார்.

வேளாண் பிரச்சினைகள், வேளாண் தொழில்நுட்பங்கள்,  சிறுதானியங்கள், காலநிலை மாற்றங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் என விவசாயத்தை பற்றியும் அதைச் சார்ந்த உணவு, தொழில்நுட்பங்கள் என ஒரு முழுமையான புரிதல் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இவ்விருதுகள் வழங்கும் விழா அமைந்தது.

இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா, ஜனவரி 15, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

Previous Post

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரெபல் ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்!

Next Post

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரெபல் ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘The Last Customer’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆருக்கு ‘வார்-2’ திரைப்படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பை பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

May 20, 2025

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

May 20, 2025

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

May 20, 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

May 20, 2025

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

May 20, 2025

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

May 20, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.