• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளாவிய கவனம் பெறும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய‌ பான்-இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

by Tamil2daynews
December 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளாவிய கவனம் பெறும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய‌ பான்-இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ள‌ நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்க்க தற்போது தயாராகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பெருமை வாய்ந்த ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) டச்சு பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதற்காக‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ 2024 ஜனவரி மாதத்தில் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் திரையிடப்படுவ‌து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை IFFR குழு வெளியிட்டுள்ளது.

உலகளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான  ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் அமைப்பாளர்கள் அங்கு திரையிடப்படும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் குறிப்பாக‌ இருந்து, நல்ல சினிமா மட்டுமே அங்கு திரையிடப்படுவதை உறுதி செய்கிறார்கள். 1972ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கிய இந்த விழா, வித்தியாசமான மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு தளமளித்து திறமைகளை கொண்டாட தவறுவதில்லை.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில்,
“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம்  ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டச்சுப் பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் உலகளவில் கவனத்தை கவர்ந்துள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்று. IFFR லைம்லைட் பிரிவில்  எங்கள் படத்தின் டச்சு பிரீமியரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்,” என்று கூறினார்.
இயக்குந‌ர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில்,
“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் அடிநாதமே ‘நீங்கள் கலையை தேர்வு செய்யவில்லை. கலை உங்களை தேர்வு செய்கிறது’ என்பது தான். ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டச்சு பிரீமியருக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ லைம்லைட் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது. ஒரு நல்ல சினிமா என்பது மொழி மற்றும் நிலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று.  எனவே, இந்தியப் பார்வையாளர்களைப் போலவே ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்களும் இந்தப் படத்தை வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்
தீபாவளி விருந்தாக நவம்பர் 10 அன்று பல மொழிகளில் திரைக்கு வந்த  ‘ஜிகதண்டா டபுள் எக்ஸ்’, அதிக வசூலை குவித்ததோடு விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Previous Post

“ஜோ” படத்தின் வெற்றியை தொடர்ந்து “VISION CINEMA HOUSE” டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

Next Post

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய இயக்குநர் அமீர்

Next Post

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய இயக்குநர் அமீர்

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.