• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’

by Tamil2daynews
August 7, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’

 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’.

இப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிரபல நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ், யுகேந்திரன் வாசுதேவன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பார்வதி நாயர், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்) உள்ளிட்டோர் நடிக்கும் ‘கோட்’ படத்தில் மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
GOAT Movie (@GOATMovOff) / Xஇப்படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டு லைக்குகளையும் இதயங்களையும் இணையத்தில் அள்ளி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்கள் அனைவரையும் இப்பாடல்கள் கவர்ந்துள்ளன.  ‘கோட்’ திரைப்படத்திற்காக முதல் இரண்டு பாடல்களை பாடி உள்ளார் தளபதி விஜய்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் ‘கோட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். ‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படமான ‘கோட்’ திரைப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்துள்ளது. இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான வகையில் ‘கோட்’ உருவாகி உள்ளது.
GOAT Movie (@GOATMovOff) / Xஅனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக சர்வதேச தரத்தில் உருவாகி உள்ள ‘கோட்’ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘ஜவான்’, ‘புஷ்பா’ மற்றும் ‘கல்கி’ ஆகிய படங்களில் பணியாற்றிய ப்ரீத்தி ஷீல் சிங் டிசோசா மற்றும் குழுவினர் ‘கோட்’ திரைப்படத்தின் கேரக்டர் வடிவமைப்பு மற்றும் ஒப்பனையை செய்துள்ளனர். உடைகளை பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர் வடிவமைத்துள்ளனர். பாடல் வரிகளை மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர். ராஜு சுந்தரம், சதீஷ், சேகர் உல்லி வி ஜே நடனம் அமைத்துள்ளனர்.

நிர்வாக தயாரிப்பு: எஸ். எம். வெங்கட் மாணிக்கம். அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார்.

Previous Post

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

Next Post

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு

Next Post

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு

Popular News

  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ’கஜானா’ படம் போல் தமிழ் சினிமாவில் அட்வெஞ்சர் படம் வந்ததில்லை – நடிகை வேதிகா உறுதி

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் கார்த்தி !! ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

November 10, 2025

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

November 10, 2025

நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

November 10, 2025
சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

November 8, 2025

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

November 8, 2025

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

November 8, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.