• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர் !!

by Tamil2daynews
February 8, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர் !!

 

சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும்  ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர்.

இயக்குநர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.  முத்து, சந்தோஷ் சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின் கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான ‘கேம் ஆன்’ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்த படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான ‘தூக்குதுரை’ படம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார்.

‘மாஸ்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘லேபிள்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சர்வைவல் த்ரில்லராக உருவாகும் இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

‘லால் சலாம்’ திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.

Next Post

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.