• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

by Tamil2daynews
September 5, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு  இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட  தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான  விவரங்களுடன்,  தனித்துவமான திரைக்கதையை படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நீ
நிரூபிக்கும்படி அமைந்துள்ளது.

இந்த கான்செப்ட் வீடியோ கி.பி 2209 இல்   எதிர்காலத்தில் நடக்கும் கதைகளத்தினை பற்றிய பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. சுதந்திர தேவி சிலை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ்மஹால் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது, ஒருவன் தனியாக உலகை ஆள்வது  போல் தெரிகிறது. மூன்று வெவ்வேறு பகுதிகளையும் காலநிலையும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரசிகர்கள் பல நுணுக்கமான விவரங்களை கண்டறியும் வகையில் பல ஆச்சரியங்களையும்  தொகுத்து தந்துள்ளார் இயக்குநர் அனுப் பண்டாரி.Imageஇப்படம் பற்றி இயக்குநர் அனுப் பண்டாரி கூறுகையில்.., ‘விக்ராந்த் ரோனாவுக்குப் பிறகு நிரஞ்சன் ரெட்டி மீண்டும்  என்னுடன் படம் செய்ய விரும்பினார், இதற்கு முன்பு நாங்கள் ஹனுமான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் சமயத்தில் சந்தித்தோம். எனது அடுத்த படமும் பாட்ஷா கிச்சா சுதீப்புடன் தான் இருக்கும் என்று கூறியதும், பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவையும் அதன் உலகத்தையும் பற்றி சொன்னதும், அவர் சிலிர்த்துப் போனார். அவரது  அடுத்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் செய்ய விரும்பினர், அதற்கு பில்லா ரங்கா பாட்ஷா சரியாக இருக்குமென்று கூறினார்.

பாட்ஷா கிச்சா சுதீப்புடன் இணைவது குறித்து அனுப் கூறுகையில், ‘சுதீப் சாருடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோனாவை மிகவும் ரசித்தார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன். சுதீப் சார் இதை தனது மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு, அதனால்  எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கூறுகையில்…
கிச்சா சுதீப்புடன் அனுப் பண்டாரி மீண்டும் இணைகிறார் என்று முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். விக்ராந்த் ரோனா தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இந்த கூட்டணி  ஏற்கனவே ரசிகர்களிடம் வரவெற்பைக் குவித்துள்ளது. பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவைக் கேட்டதும், இது நாம் தயாரிக்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அதை செயல்படுத்தி விட்டோம். சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் இணைவது எப்போதுமே ஒரு சிறந்த வாய்ப்பு. படப்பிடிப்பு தொடங்குவதற்கும், பில்லா ரங்கா பாட்ஷாவின் உலகத்தை எங்கள் பார்வையாளர்கள் அனுபவிப்பதற்காகவும் காத்திருக்கிறோம்.

பில்லா ரங்கா பாட்ஷா அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு  மிக விரைவில் துவங்கவுள்ளது.

நடிகர்கள் : கிச்சா சுதீப்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : அனுப் பண்டாரி தயாரிப்பாளர்கள்: நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா

Previous Post

RK DREAM FACTORY சார்பில் D ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் KMP productions சார்பில் M புவனேஸ்வரன் மற்றும் SBM studios சார்பில் ஷாஜு C இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “நிர்வாகம் பொறுப்பல்ல”

Next Post

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • தொடரும் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

    0 shares
    Share 0 Tweet 0
  • “நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

May 11, 2025

ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

May 11, 2025

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு

May 11, 2025

“நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

May 11, 2025

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!

May 11, 2025

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

May 11, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.