• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

by Tamil2daynews
May 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை  !! 

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான   ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

~ தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் கடந்த  மே 17ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியானது.~

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த  “தலைமைச் செயலகம்”  சீரிஸ், தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.  8 கொண்ட பொலிடிகல்  சீரிஸில், முன்னணி நட்சத்திர நடிகர்களான கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைப் பரபரப்பாகச் சொல்கிறது இந்த சீரிஸ்.

நாடெங்கும் தேர்தல் ஜுரம் அடிக்கும் இந்த சூழ்நிலையில், ரசிகர்களுக்கு சரியான தீனியாக வெளியாகியுள்ள இந்த சீரிஸ், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. நடிப்பு, இசை, உருவாக்கம், இயக்கம் எனத் தொழில்நுட்ப ரீதியில் அட்டகாசமான சீரிஸாக விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

“தலைமைச் செயலகம்” சீரிஸ், கடந்த மே 17 ஆம் தேதி வெளியான நிலையில்,  மிகக் குறுகிய காலத்தில், 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த சீரிஸ் விமர்சகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இந்த சீரிஸ் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது…

இப்போதுதான் @வசந்தபாலன் சார் இயக்கிய #தலைமைச்செயலகம் பார்த்தேன், இந்த அரசியல் சீசனுக்கான மிக அட்டகாசமான சீரிஸ்! 👏 ராதிகா மேமுக்கு பாராட்டுக்கள் ❤️❤️ கிஷோர் பிரில்லியண்ட், ஸ்ரீயா ரெட்டி மாம் 👍👍👏👏❤️ #Bharat.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது…வசந்த பாலன் மீண்டும் ஒரு தலைசிறந்த படைப்பை வழங்கியுள்ளார்! தலைமைச் செயலகம் இந்த அரசியல் சீசனில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய சீரிஸ். உழைத்த அனைவருக்கும் பெரிய வாழ்த்துக்கள்! Zee5 இல் கண்டுகளியுங்கள்.

பதபதவைக்கும் சஸ்பென்ஸ், சூழ்ச்சி மற்றும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் ‘தலைமைச் செயலகம்’  சீரிஸை  ZEE5 இல் பிரத்தியேகமாகக்  கண்டுகளியுங்கள் !
Previous Post

தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும் !!

Next Post

ஆறு கண்களும் ஒரே பார்வை விமர்சனம்

Next Post
ஆறு கண்களும் ஒரே பார்வை விமர்சனம்

ஆறு கண்களும் ஒரே பார்வை விமர்சனம்

Popular News

  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • “டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.