• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிருத்வி அம்பரின் புதிய பான் இந்தியா திரைப்படமான “சௌகிதார்” இனிதே துவங்கியது !!

by Tamil2daynews
July 5, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிருத்வி அம்பரின் புதிய பான் இந்தியா திரைப்படமான “சௌகிதார்” இனிதே  துவங்கியது !!

 

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகவுள்ள, பான் இந்திய திரைப்படமான ‘சௌகிதார்’ படத்தின் படப்பிடிப்பு, பெரும் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது. பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில், இப்படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில்  தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் கிளாப் அடிக்க, சாய்குமார் ஒளிப்பதிவு செய்து, படப்பிடிப்பைத்  தொடங்கி வைத்தார்.

‘ரதவரா’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘சௌகிதார்’ படத்தினை இயக்குகிறார்.  ‘டயலாக் கிங்’ என்று அழைக்கப்படும் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தொட்மனே குடி தன்யாராம் குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படக்குழு படத்தை அறிமுகம் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது.
Muhurath celebration for Prithvi Ambar's new pan India Movie “CHOWKIDAR”. - IndustryHit.Comபடம் குறித்து இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறுகையில், “பல மொழிகளில் வெளியாகும் எனது ஆறாவது படம் இதுவாகும். கல்லஹள்ளி சந்திரசேகர் ஒரு நல்ல படைப்பை உருவாக்கும் எண்ணத்தில், ரசவாதா படத்தின் வெற்றிக்குப் பிறகு, என்னை அணுகினார்.  இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிருத்வி நடிக்கிறார். நான் இந்த முறை ஒரு வித்தியாசமான கதையை சொல்ல விரும்பினேன், பிருத்வி அவர் பாத்திரத்திற்காக விரிவாகத் தயாராகி வருகிறார், மேலும் படம் குறித்த அவரது உற்சாகத்தை காண்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  சாய்குமார் சார், மற்றும் தர்மா சார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர் பிருத்வி அம்பர் கூறுகையில்.. ,
இன்று மகிழ்ச்சியான நாள்.  “சௌகிதார் திரைப்படம் எனது தாயின் ஆசியுடன் இனிதே தொடங்கியது. கதையை முதலில் கேட்டபோதே, இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், இப்படத்திற்கு தயாராக நேரம் கேட்டேன். இப்பட டீசரை ஒரே நாளில் படமாக்கினோம், தலைப்புக்கேற்றவாறே ஒரு அட்டகாசமான அனுபவமாக, உங்களைத் திருப்தி செய்யும் படமாக இருக்கும்.”

சாய்குமார் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடிகராக 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனது அப்பா, அம்மாவுக்கு நன்றி. நான் கன்னட படங்களில் நடிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார். எனது கன்னட பயணமும் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்பட வேடமும், ஒரு சவாலாகவே உள்ளது. தற்போது, பதினைந்து திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. “சௌகிதாரின் கதை ஒரு எமோஷனல் டிராமா. பிருத்வி ஹீரோவாக நடிக்கும் துளு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இது ஒரு நல்ல சப்ஜெக்ட்”. “பிரித்வி அம்பாருக்கும், இயக்குநருக்கும் நான் தான் சௌகிதார்.  நன்றி.”
Imageநடிகை தன்யா ராம் குமார் கூறுகையில், சௌகிதாரில் எனக்கு வாய்ப்பளித்த சந்திராசர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் தர்மா சார் மற்றும் சாய்குமார் சாருடன் பணியாற்றுவதில் நான்  பெருமை கொள்கிறேன்.

வித்யாசேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், கல்லஹள்ளி சந்திரசேகர்‘சௌகிதார்’ படத்தைத் தயாரிக்கிறார். நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர்  பாடலை எழுத, சச்சின் பஸ்ரூரு இசையமைக்கிறார். ‘சௌகிதார்’ பல மொழிகளில் தயாராகிறது. இதுவரை தனது ரொமாண்டிக் ஹீரோவாக பெயர் பெற்ற ப்ரித்வி அம்பர், இப்போது இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்வார், இது ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும்.  ‘சௌகிதார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Previous Post

இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?

Next Post

‘சேகர் கம்முலாவின் குபேரா’விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!

Next Post

'சேகர் கம்முலாவின் குபேரா'விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.