• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’.

by Tamil2daynews
September 24, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய  புதிய சுயாதீன  பாடல் ‘டாக்ஸிக் காதல்’.

ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில்  அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமான மெலோடிகள் மற்றும் தைரியமான பாடல்வரிகளின் கலவையால் விவரிக்கிறது.

‘டாக்ஸிக் காதல்’ என்ற இந்த பாடல், காதல் சில நேரங்களில் ஏற்படுத்தக்கூடிய இருண்ட, தீவிரமான மற்றும் மாறும் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தடம், எறும்பு, பிஸ்ஸா-3, பைரி போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் இதயங்களை வென்ற அருண் ராஜ், இந்த பாடலுக்கு புதிதாகவும்  இதற்கு முன் கண்டிராத இசை வடிவத்தையும் கொண்டு வந்துள்ளார். பாரம்பரிய இசை கூறுகளை நவீன இசைத்துடிப்புடன் கலந்து இசையமைப்பது என்பது அவருக்கு கை வந்த கலை, இதனால் ‘டாக்ஸிக் காதல்’ இன்றைய இசைத்துறையில் தனித்துவமாக திகழ்கிறது.

இந்த பாடலின் மேலும் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்த காலத்தில் அனைவருக்கும் பரிச்சயமான அர்ச்சனா ரவிச்சந்திரனின் பங்களிப்புதான், அவரின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி, இந்த பாடலில் தன் குரலால் மெருகூட்டியுள்ளார். அவரது சிறந்த ஆளுமை மற்றும் ஆழமான உணர்ச்சி வெளிப்பாடு பாடலின் ஆழத்தை அதிகரித்து, காதலினால் ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்த அனைவரும் தங்களை எளிதில் தொடர்பு படுத்தி கொள்ளக் கூடிய பாடலாக இது மாறுகிறது.

இந்த புதிய கூட்டணியைப் பற்றி அருண் ராஜ் கூறுகையில், “டாக்ஸிக் காதல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான  ஒரு படைப்பாகும். இந்த பாடலில் உள்ள உணர்வுகள் மிகவும் இயல்பானதும் உண்மையானதுமானவை, அதனால் அந்த உறவின் தீவிரத்தை இசையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்தேன். அர்ச்சனாவுடன் பணிபுரிவது அருமையான அனுபவமாக இருந்தது, நாங்கள் உண்மையில் ஒரு தனித்துவமான படைப்பை உருவாக்கியுள்ளோம் என்று நம்புகிறேன்” என்றார்.
அர்ச்சனா ரவிச்சந்திரனும், “அருண் இந்த படைப்புக்காக என்னை அணுகியதும், ‘டாக்ஸிக் காதல்’ என்ற கரு என்னை உடனடியாக கவர்ந்துவிட்டது. இது நம்மில் பலருக்கும், குறிப்பாக ‘ஜென்-ஸீ'(Generation-Z)  என்றழைக்கப்படும் இந்த தலைமுறையினருடன் தொடர்புடையது, மேலும் இந்த இசைப் பயணத்தில் நான் பங்கேற்பது அந்த உணர்வுகளை புதிய வழியில் வெளிப்படுத்த வழிவகுக்கிறது. நாங்கள் உருவாக்கியதை அனைவரும் கேட்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

இந்த பாடலின் இசைக் காணொளி டிப்ஸ் இசை நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடலின் கருப்பொருளுக்கு ஏற்ற காட்சிகளுடன் டாக்ஸிக் காதல் இப்போது அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகியுள்ளது.

https://youtu.be/2IiyFmufN14?si=cdrpVEStZo8-Fy-l
Previous Post

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

Next Post

‘மெய்யழகன்’ – விமர்சனம்

Next Post
‘மெய்யழகன்’ – விமர்சனம்

'மெய்யழகன்' - விமர்சனம்

Popular News

  • ’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • தொடரும் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

May 11, 2025

ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

May 11, 2025

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு

May 11, 2025

“நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

May 11, 2025

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!

May 11, 2025

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

May 11, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.