அதர்வாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ‘பட்டத்து அரசன்’..!
ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள படம், ‘பட்டத்து அரசன்’. லைகா புரடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை களவாணி,
வாகை சூடவா,சண்டி வீரன், போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஏ.சற்குணம் இயக்கி இருக்கிறார். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழனின் தனி அடையாளமாக திகழும் கபடி விளையாட்டை மையப்படுத்திய படம். தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி.
அந்தப் பெயரை ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளார்கள். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளார்கள். இதன் கதைக்களத்தை திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைத்து உள்ள இயக்குநர் படத்தின் நாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகபடுத்தியிருக்கிறார்.

மேலும் இப்படம் நடிகர் அதர்வாவுக்கு தமிழ் சினிமாவில் மேலும் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு மனுஷன் ஸ்டண்ட் அதாவது கபடி விளையாட்டில் பின்னி பெடல் எடுத்து இருக்கார் .அவரது உடல் கட்டை பார்க்கும் போது இது சொல்லவா வேண்டும்.
அதர்வாவை பார்த்தாலே ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் அவர் வரும் தோற்றம் பார்க்கவே மிக பிரம்மிப்பாக இருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தில்.
மேலும் வலுவுக்கு வலு சேர்க்க பத்தாது என்று படத்தில் ராஜ்கிரன் வேறு சொல்லவா வேண்டும் படத்தின் வெற்றியை இப்போதே உறுதியாகிவிட்டது.

ராஜ்கிரன் தோற்றத்தை பார்த்தாலே கபடி விளையாட தெரியாதவர்களுக்கும் கபடி விளையாட கற்றுக்க வேண்டும் என்று ஆவலை தானாக தூண்டுவது என்னவோ நிஜம்.
தமிழர்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டு எப்படி திகழ்கிறதோ அதேபோன்று தமிழர்களின் வீர விளையாட்டு என்று கபடியை பல நாடுகளுக்கு சென்றடைய வைப்பது தமிழனின் கடமையும், பெருமையும் அந்த பெருமையை இயக்குனர் ஏ. சற்குணம் நிறைவேற்றுவார் என்றே நம்பலாம்.’பட்டத்து அரசன்’ ‘வாகை சூடி’ தமிழ் மக்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் என்பது நிஜம்.