• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” ஃபர்ஸ்ட் லுக் !!

by Tamil2daynews
May 8, 2024
in சினிமா செய்திகள்
0
ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” ஃபர்ஸ்ட் லுக் !!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” ஃபர்ஸ்ட் லுக் !!

 

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில்  ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி  வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக,  திருநெல்வேலி வரை ஒரு முக்கியமானவரின்  உடலை எடுத்துச் செல்கிறார்.  சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம்.  அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை  தாண்டி அவர் எப்படிச் சென்றடைகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா.

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.   திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் முழு படப்படிப்பும் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Previous Post

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

Next Post

உலகின் மிகப் பெரும் திரைப்பட விழாவான கான்ஸ் (Cannes) விழாவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ் ஆக்‌ஷன் கேம்/திரைப்படம் (Interactive Live Action Movie/Game) !

Next Post
உலகின் மிகப் பெரும் திரைப்பட விழாவான கான்ஸ் (Cannes) விழாவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மார் கேம்ஸ்  நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ் ஆக்‌ஷன் கேம்/திரைப்படம்  (Interactive Live Action Movie/Game) !

உலகின் மிகப் பெரும் திரைப்பட விழாவான கான்ஸ் (Cannes) விழாவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ் ஆக்‌ஷன் கேம்/திரைப்படம் (Interactive Live Action Movie/Game) !

Popular News

  • படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

June 16, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

June 16, 2025

படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

June 16, 2025

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 14, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.