• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்’ உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது..!

by Tamil2daynews
December 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்’ உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது..!

 

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. அத்துடன் இந்தியா முழுவதும் அற்புதமான ஒப்பனிங்கை பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமிதத்தையும் பெற்றது. இத்திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை செய்து.. தற்போது 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.‌ அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுது போக்கு படைப்புகளைப் பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாகவும் இப்படம் திகழ்கிறது.‌

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு, 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையும் ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படைத்திருக்கிறது.‌
இத்திரைப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.‌ கற்பனை திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் நீல் உருவாக்கிய கான்சார் எனும் புனைவு உலகத்தின் வாழ்க்கை.. அதில் இடம் பெற்ற ஆக்சன் நிறைந்த உலகம்.. ஆகியவற்றை அவருடைய பிரத்யேக பாணியில் வழங்கிய விதம்.. ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் மற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்களின் கடும் உழைப்பு.. தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு … ஆகிய அனைத்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1- சீஸ்ஃபயர்’ படத்தில் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

Previous Post

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியாகியுள்ளது!

Next Post

‘மதிமாறன்: – விமர்சனம்

Next Post

'மதிமாறன்: - விமர்சனம்

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.