• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’ 

by Tamil2daynews
December 5, 2020
in சினிமா செய்திகள்
0
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’ 
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம். அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது
அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’. எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே தயாரிப்பில் இறங்கியுள்ளது. அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ‘ரூபம்’ தயாராகவுள்ளது. இதில் பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில்லர் படங்கள் என்றாலே தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரதானமாக இருக்க வேண்டும். ‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
2021ம் ஆண்டில் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்துக் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்!
Previous Post

நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ட்ரிப்ள்ஸ்”

Next Post

மீண்டும் தமிழில் ஸ்ரீ திவ்யா..!

Next Post
மீண்டும் தமிழில் ஸ்ரீ திவ்யா..!

மீண்டும் தமிழில் ஸ்ரீ திவ்யா..!

Popular News

  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானியின் 80வது பிறந்த நாளில் அர்ப்பணிப்பு பாடல் வெளியீடு..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.