• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது ! 

by Tamil2daynews
December 15, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது ! 
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்தியாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றாக, உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஃபுட்பாலை மையமாக வைத்து உருவாகும் “மைதான்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 2021 ல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கபட்ட நிலையில் கோவிட் -19 பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய 65% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. மீதியுள்ள பகுதிகளின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கி 2021 ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. படத்தில் மிக அதிகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள்  உள்ளது. அதற்கான வேலைகள் ஏற்கனவே லண்டன், கனடா  மற்றும் எல் ஏ( லாஸ் ஏஞ்சலீஸ்) பகுதிகளில் நடைபெற்று வருகிறது. VFX பணிகள் நிறைய நேரம் பிடிக்கும் வேலையென்பதால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படம் திரையரங்குகளில் தஷாரா பண்டிகை கொண்டாட்டமாக 2021 அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.
சையத் அப்துல் ரஹீமின் பிரமிப்பு மிக்க உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட “மைதான்” படம் இந்தியாவில் மிகப்பெரும் பயிற்சியாளராக  புகழடைந்த, இந்திய ஃபுட்பாலை உலகறியச் செய்த  மனிதனின் வாழ்வை சொல்கிறது.
“பதாய் ஹோ” படப்புகழ் இயக்குநர் ரவீந்திரநாத் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது வென்ற நாயகி பிரியாமணி, “பாதாய் ஹோ” படத்தில் மாயாஜாலம் செய்த கஜ்ராஜ் ராவ் மற்றும் பிரபல பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய
பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
Zee Studios, போனிகபூர்,ஆகாஷ் சாவ்லா மற்றும் அருனவா ஜாய் செங்குப்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.  திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர்  சய்வின் குவத்ரோஷ் மற்றும் ரிதேஷ் ஷா ஆகியோர். இப்படம் 2021 அக்டோபர் 15 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post

“ஹிப்ஆப்” ஆதியின் புதியபடம்..!

Next Post

அருண் விஜய்யின் மகன் அறிமுகம்..!

Next Post
அருண் விஜய்யின் மகன் அறிமுகம்..!

அருண் விஜய்யின் மகன் அறிமுகம்..!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.