• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஹிப்ஆப்” ஆதியின் புதியபடம்..!

by Tamil2daynews
December 15, 2020
in சினிமா செய்திகள்
0
“ஹிப்ஆப்” ஆதியின் புதியபடம்..!
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“அன்பறிவு” சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய திரைப்படம் !
மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில்  பலதலைமுறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம் ஜி ஆர் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென தனித்த பெயரை பெற்றுள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.  தற்போது இந்நிறுவனம் வளர்ந்து வரும் இளம்தலைமுறை நடிகரான நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் “அன்பறிவு” படத்தை தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தினை இயக்குகிறார்.
தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் கூறியதாவது…
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்  எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அப்படைப்புகள் எப்போதும் எங்களுக்கு மிகப்பெரும் பாரட்டையும், வரவேற்பையும் ரசிகரகளிடம் பெற்று தந்துள்ளது. எங்களுக்கு குவியும் பாரட்டுக்கள், மேலும் அழகான படைப்புகளை தர பெரும் ஊக்கமாக உள்ளது. நடிகர் ஆதி நடிப்பில் எங்களது அடுத்த படைப்பான  “அன்பறிவு” படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிக குறுகிய திரைப்பயணத்தில் குடும்பங்களுக்கு பிடித்த நடிகராக ஹிப்ஹாப் ஆதி மாறியிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அவரை உலகளாவிய ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றியிருக்கிறது. விநியோக களத்திலும் மிக நல்ல பெயர் பெற்றிருக்கிறார். “அன்பறிவு”   படம் அவரை தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் கொண்டு சேர்க்கும், இப்படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். இயக்குநர் அஷ்வின் ராம் முதன்முதலாக திரைக்கதையை கூறியபோது எனக்கு பெரும் ஆச்சர்யம் அளித்தது. கதையில் குடும்பங்கள் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. தரமான கதையும் அதனோடு கமர்ஷியல் அமசங்களும் நிறைந்திருந்தது. நடிகர் நெப்போலியன் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் அமெரிக்கவில் செட்டிலாகிவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயம், இப்படத்திற்காக அவர் இங்கு வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் கதாப்பாத்திரத்தை கேட்டவுடன் எங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் இருந்து சென்னை பறந்து வந்து, முழுக்கதையையும் கேட்டு சம்மதம் சொன்னார். படத்தை  சுற்றி மிக நல்ல விசயங்கள் தொடர்ந்து நடக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுமென நம்புகிறோம்.
இயக்குநர் அஷ்வின் ராம் கூறியதாவது…
மிகப்பெரும் நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் எனது முதல் படம் உருவாவது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். தமிழ் சினிமாவில் பல்லாண்டுகளாக, தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தந்து வருகிறது  சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் “அன்பறிவு” திரைப்படம் உருவாவது எனது அதிர்ஷடமே. இப்படம் நகைச்சுவை அம்சங்களும், உறவுகளிடையேயான உணர்வுகளையும் கமர்ஷியல் அம்சத்துடன் கலந்து சொல்லும். இந்நேரத்தில் கதையை கேட்டு இப்படத்தை தயாரிக்க ஒத்துகொண்ட தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் அவர்கள், அர்ஜீன் தியாகராஜன் அவர்கள் மற்றும் செந்தில் தியாகராஜன் அவர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஏற்கும் கதாப்பத்திரம் அனைத்து வயதினரையும் கவரும் இப்படம் அவர் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.
காஷ்மீரா “சிவப்பு மஞ்சள் பச்சை” படப்புகழ் நாயகி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். நடிகர்  விதார்த்  திருப்புனை ஏற்படுத்தும் முக்கியமான கதாப்பாத்திரத்தில்  நடிக்கின்றார். வித்தியாசமான கதைகளங்களை தேடி நடிக்கும் நடிகர் விதார்த்தின் திரைப்பயணத்தில் மற்றுமொரு மகுடமாக இருக்கும்.  நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். பொன் பார்த்திபன் எழுத்து பணியை செய்துள்ளார். ஸ்டண்ட் பணியை தினேஷ் சுப்பராயன் செய்ய, SS மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். பூர்ணிமா ராமசாமி உடை வடிவமைப்பு செய்துள்ளார். G.சரவணன், சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
Previous Post

மறைந்த பிரபலம் “VJ சித்ராவின் வெள்ளித்திரை கனவு” – விரைவில் வெளியாகும் “கால்ஸ்”

Next Post

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது ! 

Next Post
நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது ! 

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது ! 

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.