• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சூப்பர் ஹீரோ திரைப்படமான, “மின்னல் முரளி” படத்தின் போனஸ் டிரெய்லரை வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது NETFLIX நிறுவனம் !

by Tamil2daynews
December 3, 2021
in சினிமா
0
சூப்பர் ஹீரோ திரைப்படமான, “மின்னல் முரளி” படத்தின்  போனஸ் டிரெய்லரை வெளியிட்டு,  ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது  NETFLIX நிறுவனம் !
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மும்பை, XX நவம்பர், 2021:  சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தை நம் கண்ணுக்கு காட்டும்,  மின்னல் முரளி படத்தின்  போனஸ் ட்ரெய்லரை வெளியிட்டு  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது  NETFLIX நிறுவனம். Netflix இல் வரவிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படம்,  நாடு முழுவதும் பல சாதனைகளை படைத்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறது. மின்னல் சக்தி, ஒரு காவியதன்மை மிக்க கதை மற்றும் நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கான போர், என  இன்று வெளியிடப்பட்ட டிரெய்லர் பலவிதமான உணர்ச்சிகளைத் தூண்டி  பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மிகச்சிறபான கொண்டாட்டமாக, இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து திரையிடப்படவுள்ளது.
சூப்பர் ஹீரோ திரைப்படத்தில்  ‘மின்னல் முரளி’  எனும் சக்திகள் மிகுந்த அதிசய மனிதனாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். இவருடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்து, பாசில் ஜோசப் இயக்கியுள்ள, இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும்  Netflix தளத்தில் பரத்யேகமாக வெளியாகிறது.
பட டிரெய்லர்  குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது..
“டிரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இத்திரைப்படத்தின் உலகம்  குறித்து  எங்கள் ரசிகர்கள் அறிந்துகொள்ள, இந்த போனஸ் டிரெய்லர் மூலம் படத்தில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவை தர படத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர முடிவு செய்தோம். ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. போனஸ் டிரெய்லரின் மூலம், படத்தைப் பார்ப்பதில் ரசிகர்களின் ஆர்வம் பலமடங்கு பெருகுமென  நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்ஸின் தயாரிப்பாளர் ஷோபியா பால் மேலும் கூறுகையில், “எங்கள் நோக்கம் மின்னல் முரளியை ஒரு முழுமையான படமாகவும், அனைவரும் ரசிக்கும்படியான ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகவும் தர வேண்டும் என்பது தான். மிகச்சிறப்பான கதையுடன்  அற்புதமான நடிப்பை வழங்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அனைத்தும் இணைந்து, ரசிகர்களை இப்படம் மீண்டும் மீண்டும்  பார்க்கத் தூண்டும். போனஸ் ட்ரெய்லர், படத்தில்  வரவிருக்கும் விஷயங்கள் குறித்த ஆச்சர்யத்தை தூண்டி பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.
டிசம்பர் 24, 2021 அன்று மின்னல் முரளி திரைப்படம்  நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு போரின் பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

இயக்குநர்
பாசில் ஜோசப்

நடிகர்கள்
டொவினோ தாமஸ்
குரு சோமசுந்தரம்
ஹரிஶ்ரீ அசோகன்
அஜு வர்கீஸ்

எழுத்து , திரைக்கதை, வசனம்
அருண் A.R, ஜஸ்டின்  மேத்திவ்ஸ்

பாடல்கள்
மனு மஞ்சித்

இசை
ஷான் ரஹ்மான்

Previous Post

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனி ஸ்டாண்ட் மற்றும் பிரத்யேக ஆப் – ஹரிஷ் கல்யாண் கொடுத்த வாக்குறுதி

Next Post

சித்திரைச் செவ்வானம் – திரை விமர்சனம்

Next Post
சித்திரைச் செவ்வானம் – திரை விமர்சனம்

சித்திரைச் செவ்வானம் - திரை விமர்சனம்

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.